Gurugram: கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு
கொரோனா பீதியால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த 35 வயது தாயும் 10 வயது மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் 3 ஆண்டுகளாக தனி அறையில் முடங்கி இருந்த தாயும் மகனும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் குருகிராமில் உள்ள மாருதிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் மஜி. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவிக்கொண்டிருந்த காலத்தில் இவரது மனைவி முன்முன் தனது 10 வயது மகனுடன் வீட்டுக்குள் முடங்கினார்.
அதில் இருந்து தானும் வெளியே வராமல் மகனையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் இருந்துள்ளார். வேலைக்குச் சென்றுவரும் கணவர் சுஜனைக்கூட அவர் வீட்டுக்குள் வரவிடவில்லை. இதனால் சுஜன், வீட்டுக்கு அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
மனைவி மற்றும் மகனுடன் வீடியோ கால் மூலம் பேசிவந்துள்ளார். மனைவி மற்றும் மகனுக்குத் தேவையான பொருட்களை சுஜன் வாங்கி வீட்டின் கதவருகே வைத்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
கொரோனா அபாயம் குறைந்துவிட்டது என்று அறிவுறுத்தியபோதும் வீட்டை விட்டு வெளியே வராமல் மகனுடன் மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி இருந்துள்ளார் முன்முன்.
வேறு வழி இல்லாமல் சுஜன் காவல்துறையிடம் சென்று புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் செவ்வாய்க்கிழமை சுஜன் வீட்டுக்குச் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சுஜனின் மனைவி மற்றும் மகனை வெளியே அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முன்முன் தங்களை வெளியே அழைத்துச் சென்றால் குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வீட்டைப் பார்வையிட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மூன்று ஆண்டுகளாக சேர்ந்த குப்பைகள் அறை முழுவதும் இறைந்து கிடைந்ததைப் பார்த்ததாக சொல்கிறார்கள்.
Budget webinar 2023: பசுமை ஆற்றல் சந்தையில் இந்தியா முன்னணி வகிக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை