Budget webinar 2023: பசுமை ஆற்றல் சந்தையில் இந்தியா முன்னணி வகிக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை
2023-24 மத்திய பட்ஜெட் பசுமை ஆற்றல் சந்தையில் இந்தியா முன்னணி வகிக்க வழிவகுத்துள்ளதாக என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் தொடர்பான விளக்கங்களை அளிக்க மார்ச் 11ஆம் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்துகிறது. இந்தக் கருத்தரங்குகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதன் தொடக்கமாக இன்று முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கப்பட உள்ளன. முதல் கருத்தரங்கம் பட்ஜெட்டில் பசுமை வளர்ச்சிக்கான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Nirmala Sitharaman: ‘டெட்டால் போட்டு வாயை கழுவுங்க’ – மக்களவையில் நிர்மலா சீதாராமன் காட்டம்
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றத்திற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்துடன் முன்னேறுவது என மூன்று தூண்களை இந்தியா அமைத்துள்ளது." என்றார்.
மேலும், "இந்த பட்ஜெட், உலகளாவிய பசுமை எரிசக்தி சந்தையில் இந்தியாவை முன்னணியில் நிலைநிறுத்தும். எரிசக்தி உலகத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய வரவேற்பு தெரிவிக்கிறேன்" எனவும் குறிப்பிட்டார்.
தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள்… விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!!
— Narendra Modi (@narendramodi) February 23, 2023
"20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல், குசும் திட்டம், சூரிய ஒளி உற்பத்தியை ஊக்குவிக்கும் மேற்கூரை சோலார் திட்டம், நிலக்கரி வாயுவாக்கம், ஈ.வி. பேட்டரி சேமிப்பு போன்ற திட்டங்களுடன் பசுமை வளர்ச்சியின் திசையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன." என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து விவசாயம், கிராமங்களின் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் போன்ற பல தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற இருக்கின்றன. பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சப்தரிஷிகள் என்று ஏழு முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்திய நிலையில், அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.