Roopa IPS Rohini IAS: ரூபா ஐபிஎஸ்-க்கு எதிராக ரோஹினி ஐஏஎஸ் ரூ.ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு

கர்நாடகத்தில் சலசலப்பை ஏற்படுத்திவரும் பெண் அதிகாரிகள் மோதல் வலுத்துள்ளது. ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ரூ.ஒரு கோடி இழப்பீடு கேட்டு ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Karnataka : IPS Roopa continues her fight, while IAS Sindhuri is seeking damages of Rs. 1 crore

கர்நாடகத்தில் சலசலப்பை ஏற்படுத்திவரும் பெண் அதிகாரிகள் மோதல் வலுத்துள்ளது. ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ரூ.ஒரு கோடி இழப்பீடு கேட்டு ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா டி முத்கில், சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, அந்த குற்றச்சாட்டுகள் மீது ஊடகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி தனது மதிப்புக்கு களங்கம் விளைக்கிறார் எனக் கோரி ரூபாவுக்கு எதிராக ரோஹினி சிந்தூரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஐபிஎஸ்

ரூபா ஐபிஎஸ், ரோஹினி ஐஏஎஸ் இருவரும் இடமாற்றம்|கர்நாடக அரசு அதிரடி

Karnataka : IPS Roopa continues her fight, while IAS Sindhuri is seeking damages of Rs. 1 crore

பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி இருந்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குகொண்டு வந்தவர் ரூபா மவுதிகல் ஐபிஎஸ். மாநில கைவினை மேம்பாட்டுக் கழக இயக்குநராக ரூபா இருந்தார்.

ஐஏஎஸ்

கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை இயக்குநராக இருந்தவர் ரோஹினி சிந்தூரி. இருபெண் அதிகாரிகளுக்கும் இடையே சிலஆண்டுகளாக லேசான உரசல் இருந்தாலும் அது பெரிதாக வெளியே தெரியவில்லை.இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பேஸ்புக்கில், ரோஹினியின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டது இருவரின் மோதலை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இடமாற்றம்

இரு பெண் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் கர்நாடக அரசிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மையும் அதிகாரிகள் மோதல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐபிஎஸ் ரூபா, ஐஏஎஸ் ரோஹினி இருவரும் ஒருவர் மீதுஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இரு பெண் அதிகாரிகள் இடையிலான மோதல் பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டநிலையில் இருவருக்கும் பொறுப்பு ஏதும் வழங்காமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்தியாவின் 11 மர்மங்கள்| அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்

Karnataka : IPS Roopa continues her fight, while IAS Sindhuri is seeking damages of Rs. 1 crore

வலுக்கும் மோதல்

இந்த விவகாரத்தை ரூபா ஐபிஎஸ் விடுவதாக இல்லை. ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரிக்கு எதிராக தனது ஃபேஸ்புக்கத்தில் அவர் எழுதியபதிவு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரூபாய் அவரின் பேஸ்புக் பக்கத்தில் “ ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு ஊடகத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிராகப் போரிடுபவர்களை ஒருபோதும் நான் தடுத்தது இல்லை, ஊழல் சாமானியர்களை கடுமையாகப் பாதிக்கும். 

குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார், தமிழகத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார், கர்நாடகத்தில் ஒருஐஏஎஸ் கணவன் மனைவி விவாகரத்து செய்துள்ளனர். ஆனால், நானும் எனது கணவரும் ஒன்றாக வாழ்கிறோம். குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க இருவரும் போராடுகிறோம்.

குடும்பத்துக்கு இடையூறாக மாறும் குற்றவாளியை தயவு செய்து கேள்வி கேட்கவும்.பல குடும்பங்கள் அழியும், நான் வலிமையான பெண். என்னால் போரட முடியும். அனைத்து பெண்களால் போராடும் அளவுக்கு வலிமையில்லை. இதுபோன்ற குரலாக இருக்கிறேன். இந்தியா குடும்பஉறவுக்கு மதிப்பளிக்கும் நாடு. அதை காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்

Karnataka : IPS Roopa continues her fight, while IAS Sindhuri is seeking damages of Rs. 1 crore

அவதூறு வழக்கு

ஆனால், ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி, தன்மீது அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறியதற்கு ரூபா ஐபிஎஸ் மன்னிப்புக் கோர வேண்டும் இல்லாவிட்டால் ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்திலும் ரூபா ஐபிஎஸ் மீது ரோஹினி சிந்தூரி வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இதென்ன இங்கிலாந்தா! இங்கிலீஸ்ல பேசுறீங்க! விவசாயியை கடிந்து கொண்ட நிதிஷ் குமார்

சஸ்பெண்ட் செய்க

கர்நாடக சட்டசபையிலும் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. பாஜக எம்எல்சி எச் விஸ்வநாத் கேள்வி நேரத்துக்குப்பின் பேசுகையில் “ இரு பெண் அதிகாரிகளின் நடத்தையாலும், செயல்பாடுகளாலும் அரசின் நிர்வாகத்திறன் குறித்து மக்கள் தவறான சிந்தனைக்கு வருவார்கள். இதுவரை இரு அதிகாரிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா இதுபோன்ற அதிகாரிகள் நமது மாநிலத்துக்கு தேவையா என்பதுதான் கேள்வி. இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து, விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios