Mysteries in India: இந்தியாவின் 11 மர்மங்கள்| அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்
இந்தியா பல்வேறு புதிரான இயற்கை நிகழ்வுகள் , மதங்கள் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய வித்தியாசமான தன்மைகளுக்காக, பழங்காலத்திலிருந்தே மர்மங்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
இந்தியா பல்வேறு புதிரான இயற்கை நிகழ்வுகள் , மதங்கள் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய வித்தியாசமான தன்மைகளுக்காக, பழங்காலத்திலிருந்தே மர்மங்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு புதிருக்கும் பின்னும் ஒரு தர்க்கரீதியான காரணத்தைத் துண்டிக்கவும், கண்டுபிடிக்கவும் விஞ்ஞானம் கடுமையாக உழைக்கிறது. இருப்பினும் அதனால் பணம் சம்பாதிப்பவர்கள் சம்பாதிக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் கண்களுக்குத் தீணிபோடும் நவீன இந்தியாவின் மிகவும் புதிரான சில அம்சங்கள் இதோ!
கேரளாவின் இரட்டையர் கிராமம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோதினி கிராமம். இதே கோகிதினி கிராமம் என்பதைவிட இரட்டையர் கிராமம் என்றே அழைக்க வேண்டும். உலகளவில் 1000 மகப்பேறில் 16 மட்டுமே இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்கிறது அறிவியல் கணக்கு. ஆனால், கோதினி கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன, இதில் 400 பேர் இரட்டையர் என்றால் நம்பமுடிகிறதா. அறிவியல், மரபணு வல்லுநர்கள் இந்தபுதிரை கண்டுபிடிக்க இன்னும் முயன்று வருகிறார்கள், காரணம் தெரியவில்லை. மக்களின் மரபணு முக்கியக் காரணம் என்றாலும், மதம், பூர்வீகம் கடந்து இங்கு இரட்டை குழந்தைகள் பிறப்பதுதான் தெரியவில்லை
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் சோழர் கட்டிடக்கலையின் பிரமாண்டம், இந்தியாவில் உள்ள 36 வரலாற்று சின்னங்களில் ஒன்று. தமிழகத்தில் ஏராளமான பழம்பெரும், பிரமாண்ட கோயில்கள் இருந்தாலும், பிரமாண்டத்தின் பிரமாண்டம் பிரகதீஸ்வரர் கோயில், இந்த கோயிலின் கட்டிடக்கலைதான் புரியாத மர்மம். நிழல் தரையில் விழாத கோபுரம், 66 மீட்டர் கோபுரத்தில் 81 டன் கற்கோபுரம் போன்றவை பிரமாண்டமாகும். 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிடக்கலையின் உச்சத்தை சோழகர்கள் உலகிற்கு பறைசாட்டிவிட்டனர். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காலத்தில் எவ்வாறு 66 மீட்டர் கோபுரத்தையும், அதில் 81 டன் கருங்கல்லையும் கொண்டு சென்றார்கள் என்பது வரலாற்று வல்லுநர்கள் வியக்கும் புதிராகும்.
சாப்பிடாத துறவி
இந்தியா சாதுக்களின் பூமி. இந்து மதம், ஜைன மதம், புத்தமதம், சைவம், வைணவம் என அனைத்து மதங்களிலும் துறவிகள், சாதுக்கள் வாழ்ந்துள்ளனர். இதில் ஜைன மதத்தில் பிரஹலாத் ஜெனி எனும் துறவி 40ஆண்டுகளாக உணவு நீர் ஏதும் சாப்பிடாமல், வெறும் காற்றையும், சிறு உப்புக்கல்லை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து இறந்தார். ஜெனி உடலை டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசியாலஜியைச் சேர்ந்த 35 அறிவியல் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்தும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆய்வின் முடிவுகளையும் அரசு வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது. இந்த ஆய்வு உலகின் முன்னணி நிபுணர்களிடையே ஆர்வத்தை எழுப்பியுள்ளது.
டெல்லி இரும்பு தூண்
டெல்லியில் உள்ள வெற்றி தூண் எனப்படும் கீர்த்தி ஸ்தூபம் 5ம் நூண்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டது. இதுவரை 6 டன் எடை கொண்ட அந்தத் தூண் துருப்பிடிக்காமல் இருக்கிறது. இந்த இரும்பு தூண் துருப்பிடிக்காமல் இருப்பது அறிவியல் வல்லுநர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
கதவுகள் இல்லா வீடு
மகாராஷ்டிரா மாநிலம், ஷனி ஷிங்னாபூரில் உள்ள வீடுகளில் எங்கும் கதவுகளைக் காணமுடியாது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை எவ்வளவு பெரிய வீடுகள் இருந்தாலும் அங்கு கதவுகள் இருக்காது. கதவுகள் இல்லாமல்தான் வீடுகளை மக்கள் அமைக்கிறார்கள். இங்குள்ள வீடுகளை கடவுள் ஷனி காவல் காக்கிறார் என்பதால் மக்கள் கதவுகளை அமைப்பதில்லை. இந்த கிராமத்தில் வங்கிகள், போலீஸ் நிலையம் வந்தபோதிலும் கதவுகள் அமைக்கப்படவில்லை என்பது அதிசயமானது.
தொங்கும் தூண்கள்
கோயில்கள் என்பது மதம் மற்றும் கட்டிடக்கலையின் புதர்கள், அதிசயங்கள் என்றே கூறலாம். ஏராளமான வியப்புக்குரிய அம்சங்கள் குவிந்துகிடக்கின்றன. ஆந்திரப்பிரதேசமாநிலம் லெபாக்சி கோயில் அதற்கு உதாரணம். ஏறக்குறைய 500 ஆண்டு பழமையான இந்த கோயிலின் கட்டிடக்கலையின் அம்சங்களில் ஒன்று தொங்கும் தூண்களாகும். கோயிலில் உள்ள 60 தூண்களும் தரையில் பிடிமானம் இல்லாமல் தொங்குகின்றன. இந்த தூண்களின்அதிசயம் குறித்து அறிவியல் வல்லுநர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் இன்னும் ஆய்வு செய்து வருகிறார்கள்
பிபிம்பிசாரா குகைகள்
மெளரியர்கள் கால அரசரான பிம்பிசாரர் 6வது நூற்றாண்டில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் உருவாக்கிய குகை இன்றும் பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் உள்ளது. பிம்பிசாரர் தனது அரசை கைப்பற்றிய மகனிடம் இருந்து பல பொக்கிஷங்களைப் பாதுகாக்க அமைத்த குகையாகும். ஆங்கிலேயர்கள் இந்த குகையை தகர்க்க முயன்றும் முடியவில்லை
அந்தமான் தீவு பூர்வகுடிகள்
அந்தமான் நிகோபர் தீவுகளில் வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினலீஸ் பழங்குடி மக்கள் உலகின் அதியமாகும். உலகிலேயே தனித்து வாழும் பூர்வகுடிகள் இவர்கள்தான். எந்த மக்களுடனும் தொடர்பு இன்றி வாழும் இவர்கள் குறித்த ஆய்வும், தகவலும் அதியமாகும்.
பாம்புகள் நகரம்
இந்தியர்கள் கடவுள்களுக்கு இணையாக அவர்கள் வாகனங்களாக வைத்திருக்கும் விலங்குகளையும் வணங்குகிறார்கள். குறிப்பாக பாம்புகளை பல்வேறு பெயர்களில் மக்கள் வணங்கி வருகிறார்கள். இதில் மகாராஷ்டிரா மாநிலம், சேத்பால் எனும் கிராமத்தில், கருநாகங்கள், நாகப்பாம்புகள் சர்வசாதாரமாக ஊர்ந்து செல்கின்றன. மக்கள் யாரையும் தீண்டுவதில்லை, மக்களும் அடித்துக் கொல்வதில்லை. கொடிய விஷம் கொண்ட ஏராளமான பாம்புகள் திரிந்தாலும் குழந்தைகள் கூட பயமின்றி வாழ்கிறார்கள். இதில் அதிசயம் என்னவென்றால் இந்த கிராமத்தில் வாழும் மக்களில் ஒருவரைக் கூட பாம்பு இன்னும் கடித்ததில்லை.
எலும்புக்கூடு ஏரி
உத்தரகாண்ட் மாநிலம், ரூப்குந்த் ஏரிதான் எலும்புக்கூடு ஏரியாக கருதப்படுகிறது. இந்த ஏரியின் அடிப்பகுதியில் 200 எலும்புக்கூடுகள் இருப்பது இன்னும் பார்க்க முடிகிறது. கூட்டமாக எலும்புக்கூடுகள் கிடப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. பல்வேறு கட்டுக்கதைகள் ஏரியைப் பற்றி எழுகின்றன, கடவுளின் கோபம் என்று மக்கள் நம்புகிறார்கள். 9-வது நூற்றாண்டில் யாத்ரீகர்கள் இந்த ஏரியைக் கடக்கும் போது, கிரி்க்கெட் பந்துபோன்று பனிக்கட்டி மழை பெய்ததால் அதைத் தாங்க முடியாமல் பக்தர்கல் விழுந்த இறந்திருக்கலாம் என்று வரலாற்றியலாளர்கள் கருதுகிறார்கள்
பறவைகளின் தற்கொலைகள்
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டு கோடைக் காலத்தில் பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த பறவைகள் மூங்கில் மரத்தில் மோதி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது கடந்த 1960களில் இருந்து தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க முடியவில்லை, காரணத்தையும் வல்லுநர்களால் கண்டறியமுடியவில்லை.