அடித்தது ஜாக்பாட்!! துபாயில் மெகா பரிசை வென்றார் இந்தியர் ஒருவர்..! மாதம் ஒன்றுக்கு இவ்வளவு பணமா??

துபாயில் பணிபுரியும் இந்தியர் ஒருவருக்கு ஜக்கிய அமீரகம் அவருக்கு  மெகா பரிசு ஒன்றினை வழங்கி உள்ளது. அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய். 5.5 லட்சத்திற்கு மேல் பெறுவார்.

indian won lottery in dubai will get rs 5.5 lakh per month for next 25 years

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது அடில் அலி. இவர் துபாயில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்டீரியர் டிசைன் ஆலோசகராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், இவருக்கு லாட்டரி மூலம் மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. அதாவது  கடந்த வியாழன் அன்று, ஃபாஸ்ட் 5 டிராவின் மெகா பரிசு இவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு 25,000 (5,59,822) டிஹம்ஸ் கிடைக்கும்.

இதையும் படிங்க: நாயாக மாறிய மனிதன்! முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய அதிசயம்! வைரல் வீடியோ!

இந்த வெற்றிக்கு தான் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், இது மிக முக்கியமான நேரத்தில் வந்திருப்பதாகவும் கான் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது குடும்பத்திற்கு நான்தான் சம்பாதிப்பவன். கரோனா தொற்றுநோய்களின் போது எனது சகோதரர் இறந்துவிட்டார். இதனால் நான் அவருடைய குடும்பத்தையும் கவனித்து வருகிறேன். எனக்கு வயதான பெற்றோரும் 5 வயது மகளும் உள்ளனர். தக்க சமயத்தில் இந்த கூடுதல் வந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார். அதுபோல் தான் வெற்றி அடைந்த செய்தியை கேட்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக கான் கூறினார்.

"இது குறித்து நான் எனது குடும்பத்தினரிடம் கூறினேன், ஆனால் அவர்கள் நம்பவில்லை. பிறகு நன்கு உறுதி செய்த பின்னரே அவர்கள் நம்பினார்கள்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: பழங்களின் தோல் கூட வேஸ்ட் ஆகாது.. தண்ணீரை சுத்தம் செய்ய புதிய வழி - சிங்கப்பூர் விஞ்ஞானியின் அடுத்த சாதனை!

இதுகுறித்து எமிரேட்ஸ் டிராவை ஏற்பாடு செய்யும் டைச்செரோஸின் சந்தைப்படுத்தல் தலைவர் பால் சேடர் கூறுகையில், “ஃபாஸ்ட் 5க்கான எங்கள் முதல் வெற்றியாளரை அறிமுகப்படுத்திய எட்டு வாரங்களுக்குள் அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இதை FAST 5 என்று அழைப்பதற்குக் காரணம். இது மல்டி மில்லியனர் ஆவதற்கான விரைவான வழியாகும். மேலும் வெற்றியாளர் தங்களது பணத்தை ஒரேடியாக செலவு செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், வெற்றியாளரைப் பாதுகாக்கவும் இந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மேலும் அடுத்த  25 ஆண்டுகளுக்கு வெற்றியாளருக்கு வழக்கமான பணம் செலுத்துவதை உறுதி செய்கிறோம்" என்று அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios