' இது என்னடா பாம்புக்கு வந்த சோதனை’ பூனையை சமாளிக்க முடியாமல் திணறும் பாம்புகள்.. வைரல் வீடியோ
சமீபத்தில் வைரலான பூனை வீடியோ தொகுப்பு, பூனை மீதான நமது பிம்பத்தையே மாற்றிவிட்டது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் என பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அப்படி நாம் காணும் வீடியோக்கள் நம்மை சில நேரங்களில் சிரிக்க வைக்கின்றன, சில நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன.. இன்னும் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.. சில வீடியோக்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன, சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வைரலான பூனை வீடியோ தொகுப்பு, பூனை மீதான நமது பிம்பத்தையே மாற்றிவிட்டது.
அந்த வீடியோவில் களில் பூனைகள் மற்றும் பாம்புகளுக்கு இடையே பிரமிக்க வைக்கும் மோதல்களை பார்க்கமுடியும். பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த வீடியோ, ட்விட்டரில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. DinuEugenia என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்தத் தொகுப்பு, ஒரு கருப்பு நாகப்பாம்புக்கும், ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அச்சமற்ற பூனைக்கும் இடையே உள்ள மோதலில் தொடங்குகிறது.
நெருங்கி வரும் பாம்பிடம் இருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக, பூனை கோபத்துடன் பாம்பை தாக்கத் தொடங்குகிறது. எனினும் பாம்பும் பூனைக்கு பதிலடி கொடுக்கிறது. ஆனால் இறுதியில் பூனையிடம் தோற்றுப்போன பாம்பு அங்கிருந்து ஓடுகிறது. தொடர்ந்து, அடுத்த காட்சியில், மற்றொரு பாம்பு - பூனையின் மோதல் இருக்கிறது. அதில் வரும் பாம்பை தொடர்ந்து தாக்கும் பூனை, ஒருக்கட்டத்தில் அதனை வாயில் கடித்து தீவிரமாக பல்டி அடித்து சண்டையிடுகிறது.
அதே போல் மற்றொரு பூனை பாம்பை தாக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து வியப்பில் ஆழந்த ட்விட்டர் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் பூனையின் விசித்திரமான செயல்களை கண்டு ஆச்சர்யமாக உள்ளதாக பதிவிட்டுள்ளனர். ஒரு பயனர் "பூனைகள் வேறு கிரகத்தில் இருந்து வந்தவை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மற்றொரு பயனர் பூனையின் தாக்குதலை பழைய ஜாக்கி சான் திரைப்படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்.
“ஹலோ, வனத்துறையா.. இவரு பாம்புகளை வைத்து என்ன பன்றாரு பாருங்க..” வைரல் வீடியோ