ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்கையில் சகல ஐஸ்வர்யமும் பெற பல உள்ளன. அதில் குறிப்பாக, நாம் கொடுத்த பணம் நமக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றால், சில  பரிகாரம் செய்வதம் மூலம் மிக விரைவில் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்...

பரிகாரம் செய்யும் முறை

முதலில் கிழக்கு பக்கமாக அமர்ந்து, ஒரு இலையை தரையில் வைத்து, அதன் மீது பச்சை  கற்பூரத்தை ஏற்ற வேண்டும்....பின்னர்,பெரு தட்டை எடுத்து, கற்பூரம் மீது மூடி வைக்க வேண்டும்...

கற்பூரம் எரிய எரிய, அந்த தட்டு கருப்பு  நிறமாக மாறும்..அதாவது புகை வர வர,அது  வட்டமான தட்டின் உட்பகுதியில் படிந்து கருமையாக மாறும்..

இந்த கரியை தொட்டு தெற்கு பக்கமாக அமர்ந்து,ஒரு தூமையான வெள்ளை நிற பேப்பரில்,யாரிடமிருந்து பணம் வர வேண்டுமோ அவற்றின் பெயரை நடு விரலில் எழுத வேண்டும்....

அவ்வாறு எழுதும் போது,அந்த நபரின் முகத்தை மனதில் நினைத்துகொள்ள வேணும்..மேலும் பணம் விரைவில் வர வேண்டும் என நினைத்துக் கொள்ள வேண்டும்

கண்டிஷன்

மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், நல்ல ஒரு விஷயத்திற்காக இருக்க வேண்டும்..

நேர்மையான பணமாக இருக்க வேணும்...

உண்மையில் நீங்கள் உழைத்து,உங்களுடைய பணத்தை கடனாக கொடுத்திருந்தால் இதனை செய்யலாம் என பணவளகலை தெரிவித்து உள்ளது.

இவ்வாறு செய்து பணத்தை திரும்ப பெற்று விட்டால்,ஒரு பத்து பேருக்காவது உணவளித்து  மகிழ்ச்சி அடைவது  நல்லது என்பது ஐதீகம்....