சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் சிறிதளவு ஓமம் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாக கிச்சனில் இருக்கும் ஒவ்வொரு மசாலா பொருட்களுக்கும் ஒரு மருத்துவ குணங்கள் இருக்கும். அவற்றில் ஒன்று தான் ஓமம். இது அதன் தத்துவமான நறுமணம் மற்றும் காரமான சுவையை கொண்டுள்ளது. செரிமான ஆரோக்கியத்திற்காக பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் சப்பாத்தி அல்லது பூரி மாவு பிசையும் போது சிறிதளவு ஓமத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள். உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சரி இப்போது இந்த பதிவில் சப்பாத்தி மாவில் கொஞ்சமாக ஓமம் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? மற்றும் எந்தெந்த உணவுகளில் ஓமம் சேர்க்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
சப்பாத்தி மாவில் ஓமம் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் :
1. செரிமானத்தை எளிதாக்கும்
ஓமத்தில் தைமோல் என்ற அத்தியாவசிய எண்ணெய் இருக்கிறது. இது இரைப்பை குழாயில் செரிமான நொதிகளின் சுரப்பை தூண்டி செரிமானத்தை எளிதாக்குகிறது. எனவே சப்பாத்தி, பூரி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உடைத்து செரிமானத்தை எளிதாக்க ஓமம் உதவுகிறது.
2. வாயு மற்றும் உப்புசத்தை குறைக்கும் :
சப்பாத்தி அல்லது பூரி சாப்பிட்ட பிறகு ஏற்படும் வாயு தொல்லை, வயிற்றுப் பிடிப்பு, வயிறு உப்புசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க ஓமம் உதவுகிறது.
3. கொழுப்பை குறைக்கும் :
பொதுவாக பூரி எண்ணெயை அதிகமாக உறிஞ்சும். எனவே பூரிக்கு மாவட்ட செய்யும்போது அதில் சிறிதளவு ஓமத்தை சேர்க்கவும். அது எண்ணெய் கொழுப்புச்சத்தை ஓரளவு சமநிலைப்படுத்தும் மற்றும் செரிமானத்தை எளிதாக்கும்.
4. ஊட்டச்சத்தை உறிஞ்சும் :
ஓமம் கோதுமையில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும்
ஓமத்தை உணவில் சேர்ப்பதன் நன்மைகள் :
- ஓமம் செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தும்
- அஜீரண கோளாறு, இரைப்பை பிடிப்பை சரி செய்யும். இது தவிர குடல் மற்றும் வயிற்று தசைகளை தளர்த்தும்.
- உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி குடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஓமத்தை எந்தெந்த உணவுகளில் சேர்க்கலாம்?
- பரோட்டா, ரொட்டி, அடை, பூரி, சப்பாத்தி, முறுக்கு போன்றவற்றை தயாரிக்கும் போது அவற்றில் ஓமம் சேர்க்கலாம்.
- கொண்டைக்கடலை, ராஜ்மா, துவரம் பருப்பு போன்ற வாயு தொல்லையை ஏற்படுத்தும் பயிர் வகைகளை சமைக்கும் போது ஓமத்தை சேர்த்தால் வாயு தொல்லை மற்றும் வயிறு உப்புசத்தை கட்டுப்படுத்தும்.
- வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெயில் பொரிக்கும் பண்டங்கள் செரிமானம் எளிதாகும்.


