"கொரோனா பாதித்தால் இடைத்தேர்தல் தான்" - துரைமுருகன் பேச்சு..! சிரிச்சே அதிர்ந்து போன சட்டப்பேரவை..! 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று கொரோனா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது திமுக பொருளாளர் நகைச்சுவையாக பேசி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று தொடங்கியது. அதன்படி இரண்டாம் நாளான இன்று கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது அதிமுகவின் பரமசிவம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த நடவடிக்கையை ஏற்கனவே திமுக எடுத்து வருகிறது என திருப்பரங்குன்றம் சரவணன் பேசினார்.

பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, அதிரடி சரவெடியாக நகைச்சுவை கிளம்பியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் "இடைத்தேர்தல்" வந்துவிடும் என்று துரைமுருகன் பேசினார். அவர் பேசியபோது அனைவரும் பயங்கரமாக சிரித்தனர்.

மேலும் போன் செய்தால் இருமல் சத்தம் கேட்கிறது. அவ்வளவு ஏன்? சட்டமன்றம் வந்தால் கூட வெளியில் பத்து நர்சஸ் நின்றுகொண்டு கைகழுவ சொல்லி கேட்கின்றனர். வைரஸ் பற்றி அரசு பீதியை கிளப்புகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. நாங்கள் புள்ள  குட்டிக்காரர்கள். 

சட்டமன்றத்தில் நோய்தடுப்பு ஸ்ப்ரே அடிக்க வேண்டும். ஏசியில் இருப்பவர்களுக்கு கொரோனா  பாதிக்கும் நிலை உள்ளது என கூறப்படும் நிலையில் சட்டமன்றத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது. மேலும் பார்வையாளர்களும் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் நிலையில், இங்கு உள்ளவர்களுக்கு மாஸ்க் கொடுத்து அணியச் சொல்ல வேண்டுமென குறிப்பிட்டு உள்ளார்.