கெட்ட கொழுப்பை மளமளவென கரைக்கும் கருஞ்சீரகம்.. எப்படி சாப்பிடனும் தெரியுமா..?

Karunjeeragam Benefits : கருஞ்சீரகம் கொலஸ்ட்ராலை குறைக்க எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி. இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

how to use karunjeeragam or kalonji seeds to reduce your cholesterol in tamil mks

கொலஸ்ட்ரால் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகு பொருளாகும். பொதுவாக, நம்முடைய உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் தேவை. ஆனால், அவற்றின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களின் அபாய அதிகரிக்கிறது. 

உண்மையில், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இரத்த நாளங்களில் கொழுப்பு வந்து சேரும். அத்தகைய சூழ்நிலையில், தமனிகளில் ரத்த ஓட்டம் சரியாக நடக்காது. இதனால், ஆபத்தான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அதிகரித்த கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பது மிகவும் அவசியம். கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கிய மற்றும் சீரான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

அதேபோல, குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பது, மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்களை தவிர்ப்பது ஆகியவை இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. அந்தவகையில், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த 'கருஞ்சீரகம்' உங்களுக்கு நிச்சயம் உதவும். இதை உங்கள் தினசரி உணவின் ஒரு பகுதியாக மாற்றினால் தமனிகளில் படிந்துள்ள கொழுப்பை விரைவாக கரைக்க முடியும்.  இதில் இருக்கும் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலை குறைப்பதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.  கருஞ்சீரகம் அல்லது அதன் எண்ணெய் கொலஸ்ட்ராலை குறைக்க எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி. இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  கொலஸ்ட்ராலை குறைக்க அவதிப்படுறீங்களா..? அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க.. ஈஸியா குறைக்கலாம்..!

கொலஸ்ட்ராலை குறைக்க கருஞ்சீரகத்தின் நன்மைகள்:
கருஞ்சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றம் அடையாமல் தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் 
ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறிக்கவும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். மேலும், இரத்த அழுத்தமும் குறையும். கருஞ்சீரக விதையை சாப்பிட்டால் இரத்த ஓட்டம் மேம்பட்ட, இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ரால் படிவுகளும் வெளியேறி, அடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.

இதையும் படிங்க:  Summer Fruits : இந்த கோடைகால பழங்களை தினமும் சாப்பிடுங்க.. அவை கொழுப்பை சுலபமாகக் கரைக்கும்!

கருஞ்சீரக எண்ணெய் நன்மைகள்:
நீங்கள் உங்கள் உணவில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தினால், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். மேலும் இது தமனிகளில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி பிளேக் உருவாவதை தடுக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே, வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கருஞ்சீரக எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எப்படி சாப்பிடுவது?
கருஞ்சீரகத்தை உணவில் பல வழிகளில் பயன்படுத்தலாம்... ஒன்று, நீங்கள் இந்த கொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். மற்றொன்று, கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios