பதிலுக்கு பதில் எதிர்த்து பேசும் குழந்தைகளை சமாளிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.
இந்த காலத்து குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்கள் சொல் பேச்சைக் கேட்பதில்லை. பெற்றோர்கள் என்ன சொன்னாலும் பதிலுக்கு பதில் எதிர்த்து பேசுவார்கள். அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கூட கேட்பதில்லை. ஏதேனும் கேள்வி கேட்டாலோ அல்லது சொன்னாலோ கூட உங்களுக்கு எதுவுமே தெரியாது என்று முகத்தில் அடித்தபடி பதில் சொல்லி விடுவார்கள்.
சிறு வயதிலேயே குழந்தைகளிடம் இருக்கும் இந்த குணம் அவர்கள் வளரும் போது முரட்டுத்தனமாக மாற்றுகிறது. குழந்தைகளின் இந்த குணத்தை மாற்ற பெற்றோர்கள் எவ்வளவு முயற்சி செய்யதாலும் அது அவர்களுக்கு சவால் ஆனதாகவே இருக்கிறது. குழந்தைகள் இப்படி நடந்து கொள்வதற்கு முக்கிய காரணம் அவர்கள் தங்களது உணர்வுகளை கவலைகளை பெற்றோர்களிடம் தெரிவிக்க தெரியாமல் இருப்பதுதான். வளரும் போது குழந்தைகளிடம் இருக்கும் இந்த பழக்கம் அவர்களுக்கு பெரிய பிரச்சனையையே ஏற்படுத்திவிடும். இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளை அடிக்காமல், அவர்கள் மீது கோபப்படாமல் அவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற பெற்றோருக்கான சில டிப்ஸ்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
1. பெற்றோரே அமைதியாக இருங்கள்!
குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசுவது அவர்களை கோபப்படுத்தலாம். இதனால் அவர்கள் குழந்தைகளை தண்டிக்க கூட செய்யலாம். இப்படி செய்தால் குழந்தைகள் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படுவார்கள். எனவே குழந்தைகள் எதிர்த்துப் பேசும் போது பெற்றோர்கள் அமைதியாக இருக்க வேண்டும். குழந்தையிடம் குரலை உயர்த்த வேண்டாம். இப்படி நீங்கள் நடந்து கொள்வதன் மூலம் குழந்தைகள் உங்களை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
2. குழந்தைகள் பேச்சை கவனி!
குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசும்போது அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கவில்லை என்றால் அவருக்கு அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்திவிடும். எனவே அந்த சமயத்தில் நீங்கள் உங்களது குரலை உயர்த்தாமல் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேளுங்கள். பிறகு அமைதியான குரலில் குழந்தையிடம் 'என்ன சொல்ல வருகிறாய்' என்று கேளுங்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்வதன் மூலம் குழந்தையின் கோபம் தணிந்து அவர்கள் சொல்ல வருவது உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
3. எச்சரிக்கை விடுங்கள்!
சில சமயங்களில் குழந்தைகள் எல்லை தாண்டி பேசிவிடுவார்கள். அந்த நேரத்தில் நீங்கள் உடனே அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் ஒரு எச்சரிக்கை விடுவது தான் நல்லது. உதாரணமாக, உனக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க மாட்டேன்.. வெளியே அழைத்துச் செல்ல மாட்டேன் என்று சொல்லலாம். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் குழந்தைகள் பயந்து அமைதியாகிவிடுவார்கள்.
குழந்தைகள் பதிலுக்கு பதில் பேச காரணம் என்ன?
பிள்ளைகள் பதிலுக்கு பதில் எதிர்த்து பேசுகிறீர்கள் என்றால் அதற்கான காரணத்தை என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் சில சமயங்களில் பிள்ளைகள் கோபம், மன கசப்பு, பேச்சு போன்றவற்றால் இப்படி பதிலுக்கு பதில் பேசுவார்கள். மேலும் நீங்கள் போதுமான நேரம் குழந்தைகளிடம் செலவிடாதபோதும் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம். ஒருவேளை அப்படி இருந்தால் உடனே உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.
மற்றொரு காரணம் என்னவென்றால், சற்று வளர்ந்த பிள்ளைகள் பதிலுக்கு பதில் பேசினால் அவர்களிடம் கத்தாமல் அவர்கள் பேசுவதை சில நிமிடம் கவனியுங்கள். ஏனெனில், அவர்களை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். நீங்கள் விரும்பியதை செய்ய சொன்னால் அவர்களது பின்பற்றும் போது அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்பட்டும். இதனால் அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளலாம்.
பருவ வயது குழந்தைகள் பதில் கூட பதில் பேசும் போதும், நல்ல விஷயங்களை சொன்னால் அதை ஏற்க மறுக்கும் போது பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களிடம் அதிகமாக பேச வேண்டும். முக்கியமாக அவர்களது உணர்ச்சிகள் தேவைகளை குறைந்து அதை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றி உங்கள் குழந்தைகளிடம் நடந்து கொண்டால் அவர்கள் இனி பதிலுக்கு பதில் பேசமாட்டார்கள். அவர்கள் மொத்தமாக மாறிவிடுவார்கள்.
