- Home
- Lifestyle
- Parenting Tips : பெற்றோரே! குழந்தைங்க ஏன் உங்க பேச்சை கேட்கமாட்றாங்க தெரியுமா? இதுதான் காரணம்
Parenting Tips : பெற்றோரே! குழந்தைங்க ஏன் உங்க பேச்சை கேட்கமாட்றாங்க தெரியுமா? இதுதான் காரணம்
குழந்தைகள் தொடர்ந்து பெற்றோரின் பேச்சைக் கேட்க மறுப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என இங்கு காணலாம்.

Child Behavior Problems
குழந்தைகள் தொடர்ந்து தங்களை எதிர்த்து பேசுவது பெற்றோரை எரிச்சலடைய செய்யும். குறிப்பாக அவர்கள் சொல்லும் எதையுமே கேட்காமல் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி நடப்பது பெற்றோருக்கு கோபத்தைதான் வரவழைக்கும். இதற்காக குழந்தைகள் மீது கோபப்படுவதோ அல்லது கத்துவதோ, தண்டிப்பதோ தவறு. இதற்கு பதிலாக, அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னுரிமைகள்
குழந்தைகளுக்கு என்று சில முன்னுரிமைகள் இருக்கின்றன. விளையாடுவது, வெளியில் செல்வது என வெவ்வேறு விஷயங்கள் இருக்கும். பெற்றோர் தங்களுடைய வழக்கப்படி, குழந்தைக்கு முன்னுரிமைகளை வழங்குவார்கள். உதாரணமாக குழந்தைகள் படிப்பது, எழுதுவதுதான் பெற்றோருக்கு முதன்மை நோக்கங்களாகும். ஆனால் குழந்தைகளுக்கு வேறு மாதிரியான முன்னுரிமைகள் இருக்கக்கூடும் என்பதை புரிந்துகொண்டு நடந்தால் அவர்களும் சமர்த்தாக இருப்பார்கள்.
வாக்குறுதிகள்
நிறைய பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் அதை நிறைவேற்ற தவறிவிடுவார்கள். பெற்றோர் சொல்லும் வார்த்தைகளை குழந்தைகள் அப்படியே நம்பிவிடுவார்கள். அவர்களுக்குள் எதிர்பார்ப்புகள் வளரும். சொன்ன வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் பெற்றோர் இருந்தால், அவர்கள் மீது நம்பிக்கை குறையும். உங்கள் பேச்சையும் கேட்கமாட்டார்கள். மாறாக சொன்ன மாதிரியே நடந்துகொள்ளும் பெற்றோருக்கு குழந்தைகள் கீழ்ப்படியத் தொடங்குகிறார்கள்.
கோரிக்கைகள்
குழந்தைக்கு சிறந்ததை வழங்குவதை பெற்றோர் நோக்கமாக கொண்டிருந்தாலும், குழந்தை கேட்கும் அனைத்தையும் செய்யும் பெற்றோராக இருக்கக் கூடாது. இது அவர்களுக்கு எதையும் சாதித்து விடலாம் என விட்டெத்தியான மனநிலையை வளர்த்துவிடும். குழந்தைகளின் நியாயமான கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.
உணர்வுகள்
பெற்றோரின் அன்பு, அரவணைப்பு முழுமையாக உணரப்படாவிட்டாலும் குழந்தைகள் சொன்ன பேச்சு கேட்கமாட்டார்கள். பசி, தனிமை, தூக்கம், ஏக்கம் உள்ளிட்ட உணர்வுகள் இருந்தால் பெற்றோருக்குக் குழந்தைகள் கீழ்ப்படியமாட்டார்கள். அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்யுங்கள்.
அன்பின் கேவல்
குழந்தை தன்னுடைய பெற்றோரிடம் போதுமான அன்பையும் அரவணைப்பையும் உணராத தருணங்களில் பெற்றோர் பேச்சை கேட்கமாட்டார்கள். பெற்றோரின் கவனத்தை ஈர்க்கவே அவர்களின் பேச்சைக் கேட்காதது போல சில குழந்தைகள் மோசமாக நடந்து கொள்வார்கள்.