Asianet News TamilAsianet News Tamil

இந்த 2 பொருட்கள் போதும்.. அழுக்காக இருக்கும் வாஷிங் மெஷினை புதிது போல் மாற்றிவிடலாம்..

வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வாஷிங் மெஷினை எப்படிச் சுத்தம் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

How to clean washing machine these 2 things are enough Rya
Author
First Published Sep 14, 2023, 10:13 AM IST

வாஷிங் மெஷின் என்பது நம் வீட்டில் உள்ள மிக முக்கியமான வீட்டு உபகரணங்களில் ஒன்றாகும். முன்பெல்லாம் கைகளிலேயே துணிகளை துவைத்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின் தான் துணி துவைக்க பயன்படுகிறது. துவைக்கும் வேலையை எளிதாக்கி உள்ள இந்த வாஷிங் மெஷினை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம். உண்மை தான். வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வாஷிங் மெஷினை எப்படிச் சுத்தம் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வாஷிங் மெஷினை எப்படி சுத்தம் செய்வது?

வீட்டில் இருக்கும் சமையல் சோடா மற்றும்  வினிகர் இருந்தால் போதும்.  பேக்கிங் சோடா மற்றும் வினிகரை நன்றாக கலந்து பேஸ்ட் போல் வைத்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை வாஷிங் மெஷின் முழுவதும் தடவி 15 நிமிடம் ஊற விடவும். பின்னர் ஒரு ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் நன்கு தேய்க்கவும். இறுதியாக காட்டன் துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து வாஷிங் மெஷினை துடைக்கவும். வாஷிங் மெஷின் புதிது போல் மாறிவிடும்.

மின்சார கட்டணத்தை குறைக்க இரவில் ஃப்ரிட்ஜை ஆஃப் செய்வது சரியா? தெரிஞ்சுக்க இதை படிங்க..

மற்றொரு முறை

வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய மற்றொரு முறையும் உள்ளது. அதற்கு தண்ணீர், பேக்கிங் சோடா மட்டும் போதும். முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை சுட வைத்து அதை தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த தண்ணீரை நன்கு ஆறவிட வேண்டும். இப்போது இந்த தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து பின்னர் அதை வைத்து அழுக்காக இருக்கும் வாஷிங் மெஷினை துடைத்தால் போதும், வாஷிங் மெஷினில் உள்ள அழுக்குகள் நீங்கி புதிது போல் மாறிவிடும்.

புதிதாக வாஷிங் மெஷின் வாங்கியவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. ஆனால் வாஷிங் மெஷினில் ஏற்கனவே பிரச்சனை இருந்தால் இந்த குறிப்புகளை பின்பற்றும் முன்பு சர்வீஸ் செய்யும் நபர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. 

Follow Us:
Download App:
  • android
  • ios