மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் அற்புத கீரையை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
எலும்புகள் தேய்மானம் அடையும்போது மூட்டு வலி ஏற்படுகிறது. மூட்டு வலிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தீர்வு என்று பார்த்தால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதும் அவசியம். ஒருகட்டத்திற்கு மேல் மருந்துகள் தான் வலிக்கு நிவாரணம் என்றாலும், உணவு பழக்கத்தின் மூலம் மூட்டு வலியைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பதே உண்மை. இந்தப் பதிவில் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் அற்புத கீரையை குறித்து காணலாம்.
வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இது பாலக்கீரையில் உள்ளன. இதை உண்பதால் வீக்கத்தையும் குறைக்கும் என்பதால் மூட்டு வலிக்கு ஏற்றது. இது தவிர கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்களும், ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கிய சேர்மங்களும் இந்த கீரையில் உள்ளன. ஃபோலேட், இரும்புச்சத்து நிறைந்தது.
பாலக்கீரையில் வைட்டமின் 'கே' உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆஸ்டியோபோரோசிஸ் சம்பந்தமான மூட்டு வலியை தடுக்க உதவுகிறது. இந்த கீரையில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கும். செல்களை சேதம் அடையாமல் பாதுகாக்கும்.
சில ஆய்வுகளில் பாலக்கீரையில் இருக்கும் சேர்மங்கள் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தை குறைக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. பாலக்கீரையில் உள்ள வைட்டமின் கே, கால்சியம் இரண்டும் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கும். 30 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படுகிற எலும்புத் தேய்மானத்தை குறைக்க, எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
பாலக்கீரையில் உள்ள சத்துகள் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவினாலும் அதுமட்டுமே தீர்வாகாது. தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங், சரிவிகித உணவுப் பழக்கத்தை கடைபிடியுங்கள். இது உடலை நன்கு செயல்பட வைக்கும்.
