உங்க வயதுக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!!
Sleep Chart By Age : ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க போதுமான தூக்கம் மிகவும் அவசியம் தூக்கம் இல்லையெனில், அவன் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். போதுமான தூக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இதைத்தவிர நீங்கள் தேவைக்கு அதிகமாக தூங்கினால் அதுவ்ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
நிபுணர்களின் கூற்றுப்படி, 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் எந்த காரணத்தினாலும் மரணம் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. மாறாக, 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் அல்லது சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எத்தனை மணி நேரம் தூங்கினால் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நீங்கள் கேட்களால்.
இதையும் படிங்க: இரவில் தூங்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்கள்..எந்த நோயும் உங்களை நெருங்காது..!!
ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க தினமும் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இருப்பினும், இது தவிர ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறை மற்றும் வயது போன்றவற்றின் அடிப்படையில் இது அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். அதுமட்டுமின்றி, வயது அதிகரிக்கும் போது ஒரு நபரின் தூக்கம் முறையும் மாறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், எந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..? இதோ தெரிஞ்சுக்கோங்க..
எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதற்கான பட்டியல் இங்கே:
- 9 மாத குழந்தை - 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும்.
- 2 வயது குழந்தை - 11 மணி முதல் 16 மணி நேரம் தூங்க வேண்டும்.
- 3முதல் 5 வயது குழந்தை - 10 முதல் 13 மணி நேரம் தூங்க வேண்டும்.
- 6 முதல் 13 வயது குழந்தை - 9 முதல் 12 மணி வரை தூங்க வேண்டும்.
- 14 முதல் 17 வரை உள்ளவர்கள் - 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
- 18 முதல் 64 வயது உள்ளவர்கள் - 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் - 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
மேலே தெளிவாக சொல்லப்பட்ட படி, இளம் வயது உள்ளவர்களுக்கு அதிக தூக்கம் அவசியம். காரணம், அந்த வயதில்தான் உடல் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுபோல ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் அவசியம். ஏனெனில, ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை கடினமாக வேலை செய்வது. மேலும், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு அதிக தூக்கம் தேவை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D