Horoscope Today: செவ்வாயின் ராசி மாற்றம்...யாருக்கு நன்மை...? யாருக்கு ஆபத்து..? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

Horoscope Today: ஏப்ரல் மாதம் முழுவதும் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் நிகழும். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Horoscope today astrology predictions

ஏப்ரல் மாதம் முழுவதும் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் நிகழும். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் மனதில் இருக்கலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். ஆனால், பேச்சில் நிதானம் தேவை. வாழ்கையில் சில வேதனையான தருணங்கள் வரலாம். செலவுகள் அதிகமாக இருக்கும்.

ரிஷபம்:

வங்கி கடன் கிடைக்கும். திடீர் பயணம் உண்டாகும். மனதில் ஏமாற்றம் ஏற்படலாம். அனைத்து வேளையிலும் நிதானமாக இருங்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சுவையான உணவில் ஆர்வம் அதிகரிக்கும்.நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்:

மன குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பரின் உதவியால் வருமானம் ஈட்டலாம். குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் வசதிகளை கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம்:

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். சகோதரி உறுதுணையாக இருப்பார். மனம் அமைதியற்று இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்:

பணம் நகையை கவனமுடன் கையாளுங்கள். எதிலும் நிதானம் தேவை. மன குழப்பம் ஏற்படும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விமர்சங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். எச்சரிக்கை அவசியம்.

கன்னி:

அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். பொறுமையாக இருங்கள். தாயின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்த தந்தையிடமிருந்து பணம் கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.ஆன்மிக பயணம் ஏற்படும். 

துலாம்:

பழைய இடத்தை விற்று புது வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். துலா ராசிக்காரர்களுக்கு மனரீதியான பிரச்சனைகள் ஏற்படும். வாழ்வது வேதனையாக இருக்கலாம். பணியிடத்தில் உழைப்பு அதிகரிக்கும். தயார் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உறவுகள் கிடைக்கும்.திருமண யோகம் கிடைக்கும். கலை அல்லது இசையில் நாட்டம் அதிகரிக்கும்.உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு:

பூர்விக சொத்தை மாற்றுவீர்கள். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியை அடைவதற்கான பல வழிகள் திறக்கும். வருமானம் அதிகரிக்கும். தாயின் ஆதரவும் அன்பும் அதிகமாக கிடைக்கும். 

மகரம்:

தாயாரின் உடல் நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். பொறுமையாக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சில கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். 

கும்பம்:

பண புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வீடு, சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். 

மீனம்:

மீன ராசிக்கார்ரகள் மிகவும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து போகும். அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திரும்ப வரும். பண புழக்கம் அதிகரிக்கும். 

 மேலும் படிக்க...Rasi Palan: புதன் அஸ்தமனம்...ஏப்ரல் 13 வரை அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios