Rasi Palan: புதன் அஸ்தமனம்...ஏப்ரல் 13 வரை அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...!!

Rasi Palan: புதனின் அஸ்தம காலத்தில் இந்த 4 ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

These 4 Zodiac sign people should be very careful

புதனின் அஸ்தம காலத்தில் இந்த 4 ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். அதன்படி, ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி குரு,சுக்கிரன் உடன் இணைகிறார். அதேபோன்று, ஏப்ரல் 8ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார். மேலும், 13ஆம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, பொதுவாக, கிரகங்கள் அஸ்தமிக்கும் போது, அது மனித வாழ்க்கையில் நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சிலருக்கு மகிழ்ச்சியை தரும். அப்படி, எந்த ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை சந்திப்பார்கள் என்பதை இந்த பதிவின் மூலம்  தெரிந்துகொள்ளலாம்

மேஷம்:

ஏப்ரல் 8ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு 11ம் வீட்டில் அஸ்தமமாகியுள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்திற்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வருமான வழிகளில் குறைவு ஏற்படலாம். குறிப்பாக, இந்த காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை. இவர்கள் தொழிலில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். 

ரிஷபம்: 

புதனின் அஸ்தமனம் உங்கள் ராசிக்கு பல்வேறு  பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் பணி மற்றும் தொழிலுக்கான ஸ்தானத்தில் புதன் அஸ்தமமாகியுள்ளது. இதனால் உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலை இழப்பு ஏற்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலையில் உங்கள் கடின உழைப்பின் பலன் கிடைக்காமல் போகலாம்.

மிதுனம்:

புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அஸ்தமமாகியுள்ளார். ஒன்பதாம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான ஸ்தானமாகும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்திலும் வீட்டிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

தனுசு:

புதனின் அஸ்தமனத்தால், ஏப்ரல் 13 வரை மிதுன ராசிக்கார்ரகளுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகள் நடக்காமல் போகலாம். புதனின் அஸ்தமன காலத்தின் போது நீங்கள் ஆவணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வணிகத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவடையும் நிலையில் வந்து பின்னர் தடைகளை சந்திக்கலாம்.

மேலும் படிக்க...Horoscope Today: மற்றவர்களை காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ஐந்து ராசி பெண்கள்...இன்றைய ராசி பலன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios