பாரம்பரியமாகவே குளிக்காமல் இருந்து வரும் விசித்திர பழங்குடியின மக்கள்..!!
ஆஃப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அழகான நாடு தான் நமீபியா. மலைகள், கனியன் நதி, அழகிய சமவெளிப் பரப்புகள், எண்ணற்ற வனவிலங்குகள் என பூமியில் இருக்கும் சொர்க்கமாக நமீபியா திகழ்கிறது. பல்வேறு ஆச்சரியமூட்டும் நிலபரப்பை கொண்டுள்ள நமீபியா, உலகளவில் பலர் விரும்பும் சுற்றுலாத் தளங்களில் முதன்மையானதாக உள்ளது.
இந்நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள குனேனே என்கிற மாநிலத்தில் வாழக்கூடிய பழங்குடிகளின் நடைமுறை உலகளவில் கவனமீர்த்துள்ளது. மானுடவியலாளர்கள் மத்தியில் பொதுவாக ஹிம்பா என்கிற பெயரில் அறியப்படும் இந்த பழங்குடிகளுக்கு , ஓமுஹிம்பா அல்லது ஓவாஹிம்பா என்கிற பெயர்களும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் உள்ளூர்வாசிகள் இவர்களை ஓவாஹிம்பா மக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
உலகளவில் மானுவிடயலாளர்கள், ஆய்வாளர்கள் பலரும் ஹிம்பா மக்களின் வாழ்க்கை முறை, ஆடை, பொருளாதார நடைமுறை, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை உற்றுநோக்கி வருகின்றனர். அவர்களுடைய சமூகத்தில் குழந்தை பிறந்தால், அதற்கு விதைகள் வழங்குவது, மணிகள் கொண்ட கழுத்தணிகளை அணிவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. மேலும் இவர்கள் மற்ற பழங்குடியின மக்களுடன் ஒத்துழைப்பை கடைப்பிடித்து வருகின்றனர். எனினும், தங்களுடைய நம்பிக்கை மற்றும் பண்பாட்டு முறைகளை கட்டிக்காக்கும் பொருட்டு வெறிப்புற தொடர்புகள் குறித்து எச்சரிக்கையாகவே உள்ளனர்.
அதேசமயத்தில் அந்நியர்களிடமும், தங்களை காண வரும் சுற்றுலாவாசிகளிடமும் மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள். தங்களுடைய கலாச்சார விழுமியங்களையும் மரபுகளையும் கண்டு அச்சுறுத்தல் அடைபவர்களையும் பரிவுடன் நடத்துக்கின்றனர். ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளில் ஹிம்பா பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதை மூலத் தொழிலாக வைத்துள்ளனர். ஆடு, மாடு, செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளை வளர்ப்பதிலும் மற்றும் கலைநயமிக்க பொருட்களை தயாரிப்பதிலும் ஹிம்பா பழங்குடியினருக்கு ஆர்வம் அதிகம் உண்டு.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முந்திரி..!
இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் விறகு சேகரித்து, குடிநீரைத் தேடி, உணவு சமைத்து பரிமாறுவதை தங்களுடைய முதல் கடமைகளாக கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் முன்னோர்களை மட்டுமே கடவுள்களாக வணங்குகின்றனர். பெரும்பாலான ஹிம்பா குடியைச் ஆண்களும் பெண்களும் மனதுக்கு பிடித்தவர்களை மட்டுமே திருமணம் செய்துகொள்கின்றனர். ஆண்களில் பலர் இரண்டு, மூன்று மனைவிகளுடன் வாழ்பவராக உள்ளனர். இச்சமூகத்தில் பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கும் நடைமுறை அதிகளவில் உள்ளது.
நாக்கில் வெள்ளைப் பூச்சு காணப்பட்டால் குடல் ஆரோக்கியத்தை கவனிப்பது முக்கியம்..!!
நமீபியாவின் ஹிம்பா பழங்குடியின மக்கள் யாரும் தண்ணீரைக் கொண்டு குளிப்பது கிடையாது. கடுமையான பாலைவன காலநிலை மற்றும் குடிநீர் கிடைக்காத தீவிரமான சூழலில் வாழ்கின்றனர். அதனால் கிடைக்கும் தண்ணீரை அவர்கள் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால் அவர்கள் சுகாதாரம் இல்லாமல் காணப்படுவதில்லை.
ஒரு கிணத்தில் மூலிகைகளை எரித்து புகைக்க செய்கின்றனர். பிறகு புகைக்கு மேலே நின்றுகொண்டு போர்வையால் தங்களை மூடிக்கொள்கின்றனர். இதனால் புகை வெளியே வர முடியாது. பின்னர் அவர்களுடைய உடல் முழுவதும் நன்றாக வியர்க்கத் தொடங்கும். அதை வைத்து உடலையும் முகத்தையும் தலையையும் சுத்தம் செய்துகொள்கின்றனர். அதையடுத்து தங்கள் உடல் மீது, சிவப்பு நிறத்தில் காணப்படும் ஓச்சர் என்கிற பொடியை பூசிக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு அந்தச் சூழலில் வாழ்வதற்கான தகுந்த சுகாதாரத்தை தருகிறது.
இந்தப் பழக்கத்தால், உலகளவில் வாழும் பழங்குடியின மக்களிடையே ஹிம்பா மக்களை தனித்து காட்டுக்கிறது. பல பாரம்பரிய சமூகங்களைப் போலவே, ஹிம்பா மக்களிடையே பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது. அது அவர்களுக்கு கால்நடைகளை பாதுகாப்புடன் வளர்ப்பதற்கும் மற்றும் விலங்குகளை வேட்டையாடுவதற்கும் உதவியாக உள்ளது.