helmet- petrol plan introduced in andra

அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான் இனி "பெட்ரோல்"..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

விபத்து மற்றும் சாலை விதிகளை கருத்தில் கொண்டு இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும் என ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது போன்ற அதிரடி அறிவிப்பை ஆந்திர அரசு எடுத்துள்ளது 

இதற்கு முன்னதாக, ஹெல்மெட்- பெட்ரோல் சட்டம் சில மாநிலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு அமலில் இருக்கும் தருவாயில் , தற்போது ஆந்திராவில் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே ஹெல்மெட்-பெட்ரோல் திட்டம் அமலில் உள்ள மாநிலத்தில்,பல விபத்துகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும், விபத்துக்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் இன்று முதல் ஆந்திராவில் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே வேளையில் ஹெல்மெட் இல்லாதவர்கள் சிலர் அதிர்ச்சியாகி உள்ளனர்.