கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் பொது மக்கள், தற்போது கோடை மழையை என்ஜாய் செய்ய தொடங்கியுள்ளனர்.

வரும் 29ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகி அது தமிழகத்தை கடக்கும்போது 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், பலத்த மழையும் எதிர்பார்க்கலாம் என தெரிவித்து உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். 

மேலும் ஏப்ரல் 30 மே1, 2 ஆகிய தேதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மூஞ்சிக்கல், எரிச்சாலை,அப்சர்வேட்டரி பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.