காதை சுத்தம் செய்ய அடிக்கடி பட்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக காதை சுத்தம் செய்வதற்கு என நம் அனைவரது வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் எதுவென்றால் காட்டன் பட்ஸ் தான். சில சமயங்களில் காதில் அரிப்பு ஏற்பட்டால் கூட முதலில் தேடுவது இந்த பட்ஸ் தான்.

பட்ஸை அடிக்கடி பயன்படுத்தினால் காதுகளில் செவித்திறன் மோசமாக பாதிக்கப்படும் என்று பலரும் அறியாத உண்மை. இவை தற்காலிக பூமியை தந்தாலும் காதுக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த பதிவில் அடிக்கடி காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதால் செவிப்புலன் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

காது மெழுகு அழுக்கு அல்ல..

பொதுவாக காதில் இருக்கும் மெழுகை காதில் சேரும் அழுக்கு என்றுதான் நாம் அனைவரும் நினைப்போம் ஆனால் அது உண்மை அல்ல. காது மெழுகு என்பது இரண்டு வகையான சுரப்பிகள் உற்பத்தி செய்யப்படும் ஒரு பாதுகாப்பு படலம். இது உள்காதை தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் உலர்த்தாமலும் பாதுகாக்கிறது.

இயர் பட்ஸ்களால் ஆபத்து..

காதில் இருக்கும் மெழுகை வெளியேற்ற இயர் பட்ஸ் பயன்படுத்துவோம். ஆனால் அது காதில் உள்ளே இருக்கும் மென்மையான தோலை சேதப்படுத்திவிடும். மேலும் உள்நோக்கி சொருகும் போது அது காதுக்குள் இருக்கும் மெழுகை மேலும் உள்ளே தள்ளிவிடும். இதனால் காது மெழுகு கடினமாகி வெளியே வர முடியாமல் போகும். இதன் விளைவாக காது வலி, கேட்கும் திறன் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

தொற்றுகள்

இயர் பட்ஸ்களை பயன்படுத்தும்போது வெளிப்புறத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் காதுக்குள் நுழைந்து மென்மையான தோலை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், தொற்றுக்கும் வழிவகுக்கும். இந்த தொற்று கடுமையான வலி, அரிப்பு மற்றும் துர்நாற்றத்தை கூட ஏற்படுத்திவிடும்.

கேட்கும் திறன் இழப்பு

அடிக்கடி இயர் பட்ஸை பயன்படுத்தும் போது அது காதுக்குள்ள இருக்கும் மெழுகை உள்ளே தள்ளி கெட்டியாக்கிவிடும். இதனால் ஒலி அலைகள் காதுகுழலை அடைவது தடுக்கிறது. இதன் காரணமாக தற்காலிக அல்லது நிரந்தர கேட்கும் திறன் இழப்பு ஏற்படும்.

நம்முடைய காதுகள் திறன் கொண்டது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காது மெழுகு இயற்கையாகவே வெளியேவந்துவிடும். மேலும் காது வலி, அரிப்பு அல்லது கேட்கும் திறன் குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது. சுயமாக எந்த ஒரு சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நாம் நம்முடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக காதுகளையும் கவனித்துக் கொள்வதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.