மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்த தருணத்தில் மீண்டும் தற்போது சற்று குறைந்து உள்ளது. 

அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் நெருங்கும் தருணத்தில் இருந்தது. அதன் பின்னர் மெல்ல குறைந்து தற்போது இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 3998 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 984 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


  
மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.7 ரூபாய் அதிகரித்து 4005.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 152 ருபாய் உயர்ந்து உள்ளது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 48.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக அளவில்  காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வர்த்தகத்தில் தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை கண்டு வந்தது. இந்த நிலையில் சில சமயங்களில் ஏற்றமும் சில சமயத்தில் குறைந்தும் காணப்படுகிறது.