தங்கம் விலையில் இன்று நடந்த மாற்றம் என்ன..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, பெரும் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து 3838.00 ரூபாய்க்கும்,சவரனுக்கு 8 ரூபாய்  30 ஆயிரத்து 704  ரூபாய்க்க விற்கப்படுகிறது. 

தளர்ந்த வயது… தள்ளாடாத நோக்கம்… 105 வயதில் தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. மேலும் தற்போதைய  நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 49.70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.