Asianet News TamilAsianet News Tamil

தளர்ந்த வயது… தள்ளாடாத நோக்கம்… 105 வயதில் தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி

கொல்லம் நகரைச் சேர்ந்தவர் பாகீரதி அம்மா (105). இவா் தனது 9-ஆவது வயதில் 3-ஆம் வகுப்பு படித்தபோது அவரின் தாய் இறந்துவிடவே குடும்பத்தை கவனிக்க படிப்பைக் கைவிட்டார், ஆனால், கல்வி மீதான ஆா்வம் மட்டும் அவரது மனதை விட்டு நீங்கவில்லை.
 

105 aged women wrote the exam
Author
Chennai, First Published Feb 6, 2020, 11:56 AM IST

தளர்ந்த வயது…தள்ளாடாத நோக்கம்… 105 வயதில் தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி

படிப்புக்கு வயது தடையில்லை என்பதை கேரளாவைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி நிரூபித்துள்ளார். 105 வயதாகும் மூதாட்டி படிப்பின் மீதான ஆர்வத்தால் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார்

நாட்டிலேயே அந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மிக வயதான நபா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

கொல்லம் நகரைச் சேர்ந்தவர் பாகீரதி அம்மா (105). இவா் தனது 9-ஆவது வயதில் 3-ஆம் வகுப்பு படித்தபோது அவரின் தாய் இறந்துவிடவே குடும்பத்தை கவனிக்க படிப்பைக் கைவிட்டார், ஆனால், கல்வி மீதான ஆா்வம் மட்டும் அவரது மனதை விட்டு நீங்கவில்லை.

திருமணம் ஆகி 6 குழந்தைகளுக்குத் தாயான பாகீரதி அம்மா 30-ஆவது வயதில் கணவரை இழந்ததார். இருப்பினும், மனம்தளராமல் வேலை செய்து, குழந்தைகளை வளா்த்து, திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் பாகீரதி அம்மாவுக்கு கல்வி மீதான ஆா்வம் மட்டும் தீரவில்லை.

கிரேட் எஸ்கேப்... அதிபர் டிரம்ப்… செனட் அவை விசாரணையில் அமெரிக்க அதிபர் பதவி தப்பியது..!

கடந்த ஆண்டு, கொல்லத்தில் மாநில எழுத்தறிவு இயக்கத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற தோ்வில் பாகிரதி அம்மாள் 4-ஆம் வகுப்புக்கு நிகரான தோ்வெழுத தோ்வு செய்யப்பட்டாா்.

வயதாகி விட்டதால் தோ்வுகளை எழுத சிரமப்பட்ட போதிலும், சுற்றுச்சூழல், கணிதம், மலையாளப் பாடங்களின் தோ்வை மனம் தளராமல் எழுதி முடித்தாா்., இத்தோ்வின் முடிவுகள் நேற்று வெளியானதில் 275 மதிப்பெண்களுக்கு 205 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுது மட்டுமல்லாமல் கணிதப் பாடத்திலும் 100 சதவீத மதிப்பெண்ணை பாகீரதி அம்மாள் பெற்றார். கேரள மாநில எழுத்தறிவுப் பணி இயக்குநா் பி.எஸ்.ஸ்ரீகலா நேரில் சென்று பாகீரதி அம்மாளைச் சந்தித்து சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.

Follow Us:
Download App:
  • android
  • ios