தொடர் உயர்வில் தங்கம்...! சவரன் வாங்கலாமா? வேண்டாமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.14 அதிகரித்து 3966 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 அதிகரித்து 31 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்கப்பட்டது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 10 பைசா குறைந்து 40.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர் ஏற்றம் அடைகிறது.

கடந்த 2 நாட்களாக  தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளதால், தங்கம் இப்போது வாங்கலாமா? அல்லது வேண்டாமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சவரன் தற்போது மீண்டும் 32 ஆயிரத்தை நெருங்க உள்ளதால், இன்றைய நிலையில்  செய்கூலி சேதாரம் என சேர்த்து 36 ஆயிரம் ஆகும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது