அடடா... 2 நாளைக்கு முன்னதாகவே தங்கம் வாங்கி இருக்கலாமே..!  இப்ப பாரு... உயர்ந்து விட்டதே..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.73 அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.30 அதிகரித்து 3909 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 அதிகரித்து 31 ஆயிரத்து 272 ரூபாய்க்கும் விற்கப்பட்டது 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.43 உயர்ந்து 3952.00 ரூபாயாகவும், சவரனுக்கு 344 உயர்ந்து 31 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து 40.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர் ஏற்றம் அடைகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையில் தொய்வு காணப்பட்டது. அப்போதே தங்கம் வாங்கி இருந்தால் 1000 ரூபாய்  வரை  மீதப்படுத்தி இருக்க முடியும். ஆனால் தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது