காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் மளமளவென உயர்வு..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.11 அதிகரித்து உள்ளது

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.34 குறைந்து 3834.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 272 குறைந்து 30 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்கப்பட்டது 

மாலை நேர நிலவரப்படி 

கிராமுக்கு ரூ.45 உயர்ந்து 3879.00, சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்தும் 31 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 88 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1.20 பைசா குறைந்து 37.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில் காலை நேரத்தில் தங்கம் விலை குறைந்தாலும் மாலை நேரத்தில் உயர்த்து விட்டது.