சரசரவென குறைந்தது தங்கம் விலை..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.32 குறைந்து உள்ளது. தங்கம்  விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென இன்று சவரனுக்கு ரூ.256 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.32 குறைந்து 4132.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து 48.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

தற்போது தங்கத்தின் விலை குறைந்தாலும், சவரன் 33 ஆயிரம் கீழ் இறங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது