சிக்கன், மட்டன் மற்றும் மீன் இவை மூன்றில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இந்த பதிவில் காணலாம்.

சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களை காட்டிலும் அசைவ உணவுகள் மீது தான் பலருக்கும் விருப்பம் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அசைவம் சாப்பிடும் அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக அசைவம் தான் இருக்கும். சைவம் சமைத்தால் அவ்வளவுதான். பெரிய கலவரம் நடந்துவிடும். அந்த அளவிற்கு அசைவத்தின் மீது அவர்களுக்கு ஆசை.

அசைவத்தில் மீன், சிக்கன், மட்டன், காடை, நண்டு, இறால் என பல வகைகள் உண்டு. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால் மீன், சிக்கன், மட்டன் இவை மூன்றில் எது சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது? என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  1. மீனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதன் மற்றும் நன்மைகள் :

ஊட்டச்சத்துக்கள் -

மீன் அதிக ஆரோக்கியம் நன்மைகளை கொண்டுள்ளன. இவற்றில் கலோரிகள், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

நன்மைகள் -

மீனில் ஒமெகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், அவை மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. ஆனால் வைட்டமின் டி மற்றும் அயோடின் நிறைந்துள்ளன. மீன் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கும் நிம்மதியான தூக்கத்தை தரும் மற்றும் புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவும். இந்த நன்மைகளை பெற வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுங்கள்.

2. சிக்கனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதன் மற்றும் நன்மைகள் :

ஊட்டச்சத்துக்கள் -

சிக்கனில் இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், புரதம், கலோரிகள், ஒமெகா-3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது மற்றும் குறைந்த கொழுப்பை கொண்டுள்ளன.

நன்மைகள் -

சிக்கனில் கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாக உள்ளதால் எடை இழப்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்ததாகும். முக்கியமாக எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிக்கன் சிறந்த தேர்வாகும். மேலும் இதில் வைட்டமின் பி6 மற்றும் நியாஸின் போன்ற அத்தியாவாசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

3. மட்டனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதன் மற்றும் நன்மைகள் :

ஊட்டச்சத்துக்கள் -

ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, புரதம், கலோரிகள், துத்தநாகம் போன்றவை அதிகம் உள்ளன. மேலும் இது புரதம், பொட்டாசியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.

நன்மைகள் -

மட்டன் நாவிற்கு அதிக ருசியை தவிர்ப்பதால் பலரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் அதிகமாக இருப்பதால் அவை உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும். அதிக ஆற்றல் தேவை உள்ளவர்களுக்கு மட்டன் சிறந்த தேர்வாக இருக்கும்.

எது சிறந்தது?

மீன், சிக்கன், மட்டன் இவை மூன்றில் சிறந்தது எது என்பது உங்களது இலக்குகளை பொறுத்ததுதான். அதாவது நீங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பினால் மீன் தேர்வு செய்யலாம். மெலிந்து புரதம் சாப்பிட விரும்பினால் கோழி தான் சிறந்த தேர்வு. கோழி இதை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இரும்புச்சத்து மற்றும் அதிக ஆற்றல் தேவைப்படுபவர்கள் ஆட்டு இறைச்சியை தேர்வு செய்யலாம்.

குறிப்பு :

- எந்த உணவையும் அளவாக சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

- இறைச்சிகளை நீங்கள் தயாரிக்கும் விதத்தை பொறுத்துதான் அவற்றில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் முழுமையாக பெற முடியும். அவற்றில் இருக்கு அதிகபட்ச ஊட்டச்சத்துகளை பெற அவற்றை பொறித்து அல்லது வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.