கொரோனா எதிரொலி..!  வெளியான முக்கிய தகவல்..! 

வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மத்திய மாநில அரசுகள் பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு புதிய தகவல் வந்துகொண்டே இருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு .

கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி ஞாயிறன்று சுயஊரடங்கு அறிவித்துள்ளதால் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து - மெட்ரோ நிர்வாகம்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்வு- சுகாதாரத்துறை அமைச்சகம்.

கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

கொரோனா எதிரொலி : தமிழகத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கும் தேதி தள்ளிவைப்பு என மத்திய அரசு அறிவிப்பு.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது - தமிழக அரசு அறிவிப்பு.

கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்