ஓரிரு வரிகளில்.. "செம்ம சூப்பர் நியூஸ்" உள்ளே..! எல்லாம் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களே...! 

1400 கும் அதிகமானோருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து, மத்திய மாநில அரசுகள் அடுத்தகட்ட நடவடிக்கையில்  இறங்கி உள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது நிலைமைக்கு ஏற்ற வகையில் புது புது அறிவிப்புகளும் வந்துகொண்டிருக்கிறது.

அதில் சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

இன்றுடன் ஓய்வு பெறவிருந்த மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு செய்து தற்காலிக பணி நியமன ஆணை  வழங்கி உள்ளது தமிழக அரசு.( 3038 மருத்துவ ஊழியர்கள் தேவை என சமீபத்தில் அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது அரசு)

ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்  என தமிழக நிதித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். (எப்படியோ குழப்பத்திற்கு ஒரு முடிவு கிடைத்து உள்ளது)

தமிழகத்திலேயே ஈரோட்டில் தான் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது . பாதிக்கப்பட்ட 25 பெரும் இஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1430 பேர் இன்று ஒரு நாள் மட்டும் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. (நடந்தால் நல்லது )

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட எழுச்சி, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் 1200 புள்ளி வரை ஏற்றம் கண்டது.(இவ்வளவு கஷ்டத்திலும் ஏதோ மனதிற்கு ஒரு ஆறுதல் செய்தி)