களத்தில் இறங்கிய எடப்பாடி..! அதிரடி விசிட்செய்து பரபரப்பு தகவல் ..!

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை  இன்று முதல் செயல்பட தொடங்குகிறது. 350 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையை இன்றுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.  

குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்   

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முதியோர்கள், கர்ப்பிணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார் 

மேலும்  தனிமை படுத்துதல் மூலமாக தான் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முடியும், தமிழகத்தில்   இதுவரை கொரோனா பரவுதல் முதல் கட்டத்தில் தான் உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்
 
கொரோனா பரவுதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து,கொரோனாவிற்கு  எதிராக போராடி மக்களை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்க பல அதிரடி  நடவடிக்கை மட்டுமல்லாது ... நேரடியாக களத்தில் இறங்கி விசிட் செய்து மக்களுக்கு' தேவையான விழிப்புணர்வு கோரிக்கைகளை  வைத்து உள்ளார் எடப்பாடி. எனவே மக்களாகிய நாம் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.