Kitchen Tips : இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ள சில கிச்சன் டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையல் என்பது ஒரு சுமை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அது ஒரு கலை. அதை ரசித்து செய்தால் மட்டுமே சமையல் சுவையாக வரும். அதற்காக சில குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்களது சமையலை அட்டகாசமாக மாற்றி அசத்துங்கள்.

கிச்சன் டிப்ஸ்கள் :

1. சாம்பார் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க துவரம் பருப்பை வேக வைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து வேக வைக்கவும்.

2. ஒரு மாதம் ஆனாலும் பச்சை மிளகாய் கெட்டுப் போகாமல் இருக்க பேப்பர் பையில் சின்னதாக துளையிட்டு அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

3. காளான் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க பிளாஸ்டிக் கவரில் சேமிக்காதீர்கள். டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

4. வீட்டில் புட்டு செய்யும் போது அதில் பச்சை வாசனை வராமல் இருக்க அரிசியை வறுத்து ஊறவைத்து, பிறகு பயன்படுத்தவும்.

5. இரவில் சாதம் மீந்துபோனால் அதில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். சாதம் கெட்டுப்போகாது.

6. முருங்கைக்காய் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க அதை துண்டுகளாக வெட்டி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

7. தோசை மாவு புளித்துவிட்டால் அதை தூர ஊற்றாமல், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து பணியாரம் செய்து சாப்பிடுங்கள். ருசியாக இருக்கும்.

8. கோதுமை மாவில் பரோட்டா செய்யப் போகிறீர்கள் என்றால் மாவில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து பிசையுங்கள். சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரணமும் ஆகும்.

9. பன்னீர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது வினிகர் தடவி சேமியுங்கள்.

10. மீனை ஃபிட்ஜில் வைக்கும் முன் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து வைத்தால், மீன் கெட்டுப்போகாது. ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்.

11. பூரி மாவி பிசையும் போது அதில் பாதி கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் ரவை மற்றும் நெய் சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் பூரி கடைகளில் இருப்பது போன்று உப்பலாக வரும்.

12. கடாயில் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை நெய் விட்டு வதக்கி ஆற வைத்து ஒரு சின்ன துண்டு தேங்காய் சேர்த்து அரைத்து பிறகு அதை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

13. பாசிப்பருப்பை பாதி அளவு வேக வைத்து அதை அவல் உப்புமா செய்யும் போது அதனுடன் கலந்து கொள்ளுங்கள் சுவை சூப்பரா இருக்கும்.

14. பொங்கல், தோசை செய்யும் போது சீரகத்தை கையால் நுணுக்கி அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். சுவையாகவும், மணமாக இருக்கும்.

15. தக்காளி உடனே பழுக்க அதை ஒரே ஒரு பழுத்த தக்காளியுடன் போட்டவும். பழுக்காதெல்லாம் பழுத்துவிடும்.