கோவில் கோவிலாக செல்லும் துர்க்கா ஸ்டாலின்..! 

திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார். ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி இருவருமே எந்த ஒரு பிரச்சாரத்திலும் மதசார்பின்மையை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்வர். ஆனால் துர்கா ஸ்டாலின் அவர்கள் கோவில் கோவிலாக சென்று மனமுருகி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

அதன்படி தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று இன்று காலை பிரார்த்தனை செய்து கொண்டார். தினமும் நடைபெறும் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக இன்று காலை 10 மணிக்கு துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். பிறகு சிறப்பு பூஜை செய்து கடவுளை வழங்கினார்.

துர்கா ஸ்டாலினுடன் ஆலடி அருணாவின் மகளும் திமுக முன்னாள் அமைச்சருமான பூங்கோதையும் இருந்தனர். சமீப காலமாக துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோவிலுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்னதாக காசிக்கு சென்று வந்தார் துர்கா ஸ்டாலின். தற்போது திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்