கொரோனா எதிரொலி..!  ஓடி ஓடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் பலி ..! வாடும் சீன மக்கள்...! 

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை சீனாவில் மட்டும் 563 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதவிர 28 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சீனாவில் உள்ள ஹுவாங் நகரில் உள்ள மருத்துவமனை அனைத்திலும் மருத்துவர்கள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக இருக்கின்றனர்.

அடம் பிடித்து விவசாயியை கல்யாணம் கட்டிக்கிட்ட பொறியியல் பட்டதாரி..! இளம் பெண் கூறும் அசத்தல் காரணம்..!

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாகவே ஓய்வு இல்லாமல், உறக்கம் இல்லாமல் சரிவர சாப்பிடாமலும் மும்மரமாக நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்ததால் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளான இளம் மருத்துவர் சாங் யிங்கீ ( 28) மாரடைப்பால் உயிரிழந்தார்.இந்த சம்பவம் ஒட்டுமொத்த சீன மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சீன மக்கள் கருத்து தெரிவிக்கும் போது, "தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இரவுபகலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ரியல் ஹீரோ மருத்துவர் சாங் யிங்கீ என புகழ்ந்து தங்களுடைய அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக  சீனியர் மருத்துவர் ஒருவரும் இதேபோன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.