கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவரையே கொன்றது "கொரோனா"...!  பேரதிர்ச்சியில் சீனா..! 

கொரோனா வைரஸ் என்ற புது வைரஸ் தோன்றி, அதன் தாக்கம் அதிகரிக்கும் என முதன் முறையாக கண்டறிந்த மருத்துவர் அதே வைரஸ் தாக்கியதில் பரிதாபமாக உயிர் இழந்தார்

சீனாவில் பெரும் வைரலாக பரவி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை 563 பேர் உயிர் இழந்தனர். இதற்கு முன்னதாக சீனா வூஹானில் உள்ள மருத்துவமனையில் லீ வென்லியாங் என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். 

அவரிடம் சிகிச்சைக்கு வந்த சிலர் தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியான வைரஸ் தாக்கம் இருப்பதையும், அது மிக கொடூரமான வைரஸாக உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் கண்டறிந்து, சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு இருந்தார். 

கொரோனா எதிரொலி..! ஓடி ஓடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் பலி ..! வாடும் சீன மக்கள்...!

ஆனால் சீன அரசோ இது குறித்து எதுவும் பேச கூடாது என வாயை அடக்கியது. இதன் காரணமாக தேவையான விழிப்புணர்வு கிடைக்காமல் போனது. இந்த ஒரு தருணத்தில் தான் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு, லீ சிகிச்சை அளித்த போது அவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியது. இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதே போல் தொடர்ந்து ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த மருத்துவர் சாங் யிங்கீ என்பவரும் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.