இனி வெந்நீரை இப்படி குடிச்சி டயட்க்கு நோ சொல்லுங்க.. ஒரே வாரத்தில் 5 கிலோ எடை டக்குனு குறையும்!
Hot Water Weight Loss :தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடல் எடை மின்னல் வேகத்தில் குறையும் தெரியுமா?
இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். தற்போது இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பால் பல பிரச்சினைகளும் கூடவே வருகிறது. உடல் எடையை குறைக்க பெரும்பாலும் டயட்டில் இருப்பது, உடற்பயிற்சி செய்வது அல்லது ஏதாவது ஒரு வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால், எந்த கஷ்டமுமின்றி உடல் எடையை மளமளவன குறைக்க ஒரு சிறந்த பானம் ஒன்று உள்ளது. அதுதான் வெந்நீர். ஆம், உடல் எடையை குறைக்க வெந்நீர் பெரிதும் உதவுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடல் எடை மின்னல் வேகத்தில் குறையும் தெரியுமா? எனவே, வெந்நீர் குடித்தால் உடல் எடையும், தொப்பையும் எப்படி குறைக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ காலையில இந்த 4 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!
வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
உண்மையில், வெந்நீர் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதற்காக நீங்கள் தினமும் 8 டம்ளர் வெந்நீரை குடிக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 8 டம்ளர் நீரையும் ஒரே நேரத்தில் குடிக்க கூடாது. இதற்கென சில வழிமுறைகள் இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
இதையும் படிங்க: உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்கணுமா..? அப்ப தினமும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ங்க..
ஒரு நாளைக்கு 8 கிளாஸ் வெந்நீர் குடிப்பதற்கான சரியான நேரம்:
1. தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் 250 மில்லி லிட்டர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
2. பிறகு 9.00 மணிக்கும் இதே போல் 250 மில்லி லிட்டர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
3. 11.30 மணிக்கு 300 மில்லி லிட்டரும்,
4. 1.30 மணிக்கு 250 மில்லி லிட்டரும்,
5. 3.30 மணிக்கு 300 மில்லி லிட்டரும்,
6. 5.30 - 6.30 மணிக்கு 300 மில்லி லிட்டரும்,
7. 7.00 மணிக்கு 150 மில்லி லிட்டரும்,
8. 9.00 - 10.00 மணிக்கு 100 - 150 மில்லி லிட்டர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
ஆனால், இப்படி குடித்தால் எப்படி நன்மை கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மையில், வெந்நீர் குடித்தால் நம் உடலானது, அதிகமாக ஹிட் ஆகும். எனவே, இதைக் குறைக்க, நம் உடலானது அதிகமாக வேலை செய்யும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக தான் நம் உடல் எடையை வேகமாக குறைக்க வெந்நீர் உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வெந்நீரை தினமும் குடியுங்கள், எடையை எளிதாக குறைக்கலாம்.
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகள்:
- தினமும் வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை நீங்கும்.
- தொண்டை விறைப்பை குணப்படுத்த பெரிதும் உதவும்.
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு வெந்நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வெந்நீர் குடித்து வந்தால் சருமம் சுத்தமாகும்.
- செரிமானமும் நன்றாக இருக்கும்.
- நம் உடலானது எப்போதும் நீரேற்றுடன் இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D