எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ காலையில இந்த 4 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!
Worst Breakfast Foods : உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு இன்றைய காலத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனையால் இதய நோய், நீரிழிவு, வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற பல வகையான நாள்பட்ட பிரச்சனையை அதிகரிக்க செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதிக உடல் எடையால் நீங்கள் கவலைப்படுகிறீர் என்றால், அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். மேலும், அதிக எடையின் பக்க விளைவுகள் எல்லா வயதினரிடமும் காணப்படுகின்றது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக, உணவை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக கலோரி உணவுகளை சாப்பிடுவதால் தான். உடல் எடையை குறைக்க காலை உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
இதையும் படிங்க: இனி காபி, டீக்கு பதிலாக தினமும் காலையில் இந்த 5 டிரிங்ஸ்ல ஒன்னு குடிங்க.. ஹெல்தியா இருப்பீங்க..
ஆரோக்கியமான காலை உணவு அவசியம்:
காலை உணவு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது மற்றும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட்டால் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, காலை உணவு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருப்பது மிகவும் அவசியம். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும். மேலும், நீங்கள் சாப்பிடும் காலை உணவு உங்கள் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், காலை உணவின் ஊட்டச்சத்து மதிப்பை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். அந்த வகையில், காலையில் சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றி இப்போது இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: வொர்க் அவுட்க்கு முன் 'இந்த' அஞ்சுல ஏதாவது ஒன்று சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருப்பீங்க..
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சாப்பிட கூடாத உணவுகள்:
1. என்னை உணவுகள்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பூரி, வடை, பஜ்ஜி, சமோசா, ஜிலேபி போன்றவற்றை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த உணவுப் பொருட்களில் அதிகளவு எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது மற்றும் இதில் அதிக கலோரிகளும் உள்ளது. இது உடல் எடையை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.
2. பேக் செய்யப்பட்ட ஜூஸ்:
காலையில் பேக் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு. இது உடல் எடையை கூட்டும். காரணம், இதில் அதிகளவு சர்க்கரை மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன. இதனால் உடல் எடை அதிகரிப்பால், பல நோய்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடிப்பது நல்லது.
3. வெள்ளை ரொட்டி:
பெரும்பாலானோர் காலை உணவுக்கு வெள்ளை ரொட்டியை சாப்பிடுவதை விரும்புவார்கள். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காரணம், இதில் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது கொழுப்பை உடலில் சேமித்து வைப்பது மட்டுமின்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
4. சாக்லேட்:
காலையில் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை கூடும். காரணம், இதில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இது உங்களை கொழுப்பாக மாற்றும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D