உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்கணுமா..? அப்ப தினமும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ங்க..
காலையில் எழுந்ததும் சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் நிச்சயமாக உடல் எடையை விரைவில் குறைக்கலாம் அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு இன்றைய காலகட்டத்தில் ஒரு தீவிர பிரச்சினையாக மாறி உள்ளது. உலகில் இருக்கும் பெரும்பாலானோர் இந்த பிரச்சனையால் சிக்கித் தவிக்கின்றனர். இதய நோய், உயர்த்த அழுத்தம் கொழுப்பு கல்லீரல், அதிகரித்த கொழுப்பு, செரிமான பிரச்சனை மற்றும் மனசார்பு போன்ற பல தீவிர நோய்களுக்கு இந்த பிரச்சனையே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றன. இதனால்தான் பலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர்.
உடல் எடையை குறைக்க மக்கள் பலர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. எடை இழப்பு செயல்முறை ஒரு நீண்ட செயல்முறை ஆகும். முக்கியமாக, இதற்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது. உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமில்லை. இதை செய்ய நீங்கள் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சில நல்ல பழக்க வழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
ஆனால், காலையில் எழுந்ததும் சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் நிச்சயமாக உடல் எடையை விரைவில் குறைக்கலாம் அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக புரதம் கொண்ட காலை உணவு:
காலை உணவு நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுவது அவசியம். ஏனெனில், இது அடிக்கடி சாப்பிடும் ஆசையை குறைக்கிறது மற்றும் மதிய உணவு வரை பசி உணர்வை ஏற்படுத்தாது. உதாரணமாக, முட்டை, நட்ஸ்கள் மற்றும் சியா விதைகள் போன்றவை காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: Sabja Seeds Water: தினமும் காலையில் வெறும் வயிற்றில் 'இந்த' நீரை குடிங்க; உடலின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்!
தண்ணீர் நிறைய குடிக்கவும்:
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் இரண்டு கிளாஸ் தண்ணீருடன் உங்கள் நாளை தொடங்கலாம். இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன், உடலை நீரேற்றமாகவும் வைத்திருப்பதுடன் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது தெரியுமா..? வேண்டுமானால், நீங்கள் சீராக நீர் அல்லது எலுமிச்சை நீருடன் உங்கள் நாளை தொடங்கலாம். இதனால் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
வைட்டமின் டி சத்து அவசியம்:
உடலில் வைட்டமின் டிச்சத்து குறைவதால் உடல் எடை கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றன. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலை சூரிய ஒளியில் இருப்பது நல்லது. ஏனெனில், இது வைட்டமின் டி யை சப்ளை செய்கிறது மற்றும் உடலில் கொழுப்பு சேராமலும் தடுக்கிறது..
இதையும் படிங்க: clove for weight loss : உடல் எடையை வேகமாக குறைக்க கிராம்புவை இப்படி எடுத்துக்கோங்க!
காலை உடற்பயிற்சி அவசியம்:
காலை உடற்பயிற்சி மிகவும் அவசியம். இது உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D