Sabja Seeds Water: தினமும் காலையில் வெறும் வயிற்றில் 'இந்த' நீரை குடிங்க; உடலின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்!
தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா நீரை குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சப்ஜா விதை தண்ணீருடன் உங்கள் நாளை தொடங்கினால் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த விதைகளில் முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. எனவே, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சப்ஜா விதை தண்ணீரை குடிப்பதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய நன்மைகளின் பட்டியலை குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
செரிமான ஆரோக்கியத்திற்கு: சப்ஜா தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வயிற்று உப்புசம், வாயு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. சொல்லப்போனால், இந்த நீர் உங்கள் வயிற்றை பாதுகாக்கிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது: சப்ஜார் விதையை இரவு தண்ணீரில் ஊறவைக்கும் போது அந்த விதைகள் ஊறிப் போய் அதில் இருக்கும் நார்ச்சத்து அதிகரிக்க தொடங்குகிறது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் அந்த விதையுடன் தண்ணீரையும் சேர்த்து குடித்தால் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை சீராக வைக்க சப்ஜா நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியெனில், சப்ஜா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் உயராமல் தடுக்கப்படுகிறது.
சருமத்திற்கு நல்லது: சப்ஜா விதையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன அவை முகப்பரு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதை தண்ணீரை குடித்து வந்தால் சருமம் பொலிவாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: சப்ஜா விதையில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: Sabja Seeds : உடல் சூட்டைத் தணிக்கும் சப்ஜா விதைகளின் ஆரோக்கியப் பலன்கள்!
இதயத்திற்கு நல்லது: சப்ஜா விதைகள் மாரடைப்பை தடுக்கவும் மற்றும் இரத்தத் தட்டு கட்டிகளின் வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது பல்வேறு இதய கோளாறுகளுக்கும் உதவுகிறது. எனவே, தினமும் சப்ஜா விதையின் தண்ணீரை குடியுங்கள்.
இதையும் படிங்க: உடல் எடை குறைய தேங்காய் நீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்! நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க...
மன அழுத்தத்தை குறைக்கும்: சப்ஜா விதை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்தி செயல்பாட்டையும் ஒழுங்குபடுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D