உலகமே ஒரு சிறிய செல்போனில் அடங்கி விடுகிறது என்று   சொல்லலாம்.இன்றைய நிலையில் மொபில் போன் இல்லை என்றால்,  எந்த வேலையும் ஓடாது என்பது நமக்கு தெரியும்..

அதே சமயத்தில்,அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் தான்...அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதினால்,உடல் நலத்திற்கு மட்டுமில்லை.மன நலத்திற்கும் கேடு விளைவிக்கும என்பதை நாம்  இங்கே பார்க்கலாம் ..

ஏற்கனவே சொன்னபடி "spy app"  பற்றி பல தகவல்கள் நாம் பார்த்தோம்.  நமக்கே தெரியாமல் செல்போனில் நாம் செய்யும் சாட், மெசேஜ்,கால்ஸ் என  அனைத்தும்  மற்றொருவரால் கண்காணிக்க பயன்படுவது தான் இந்த ஆப்

சரி இந்த ஆப்ஸ் நம்ம மொபைலில் இருப்பதை எப்படி  தெரிந்துக்கொள்வது தெரியுமா...?

சில அறிகுறிகளை வைத்து உங்கள் போனில் ஸ்பை ஆப் இருப்பதை உறுதி செய்யலாம்.

உங்கள் போனை ஆப் செய்யும்போது வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்; ஆப் ஆன பிறகும் சில நொடிகள் அதன் திரை ஒளிரும்.

நீங்கள் பயன்படுத்தாமலே திடீரென மொபைலின் திரை ஒளிரும்.

எந்தப் பயன்பாடும் இல்லாமலே திடீரென போன் சூடாகும்.

வழக்கத்தைவிட வேகமாக மொபைலின் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடும்.

மொபைல் டேட்டா பயன்பாடும் வழக்கத்தைவிட அதிகமாகியிருக்கும்.

உங்களுக்கு வரும் மெசேஜ்களை நீங்கள் படிக்காமலேயே, தானாகவே படிக்கப்பட்ட மெசேஜாக மாறியிருக்கும். அதை ‘ஸ்பை ஆப்’ பயன்படுத்தி யாரோ படித்திருப்பார்கள் என்பது  பொருள்.

போன் அழைப்புகளைப் பேசும்போது பின்னணியில் தேவையற்ற சத்தங்கள் எழும்.

உங்களுடைய ‘Location’ உங்களுக்கே தெரியாமல் ‘ஆன்’ ஆகியிருக்கும். உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பதற்காக மொபைலின் ஜி.பி.ஆர்.எஸ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

வெறும் 4,000 ரூபாய்..!

இந்த ஆப்ஸ் மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்ய ரூ.4000 முதல் பேக்குகள் தொடங்குகின்றது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ‘ஸ்பை ஆப்’ கிளை நிறுவனம்  உள்ளது.அவர்களை தொடர்பு கொண்டால்,அந்த ஆப்பின் சிறப்புகளை விளக்கிவிட்டு, ‘‘ஒரு மொபைலில் இதை இன்ஸ்டால் செய்ய 20,000 ரூபாய் ஆகும்’’ என்று சொல்கிறார்களாம்

மேலும்,எங்களிடம் 4,000 ரூபாயிலிருந்து பேக்கேஜ்கள் தொடங்குகின்றன’’  என்றும் கூறுகிறார்களாம்.

 ‘ஸ்பை ஆப்’கள் நமக்கே தெரியாத பெயர்களில் நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ‘Settings’ என்ற பெயரிலோ, ‘Tools’ என்ற பெயரிலோ இந்த ஆப் இன்ஸ்டால் ஆகி இருக்குமாம்

 ‘ஆன்டி வைரஸ்’ சாஃப்ட்வேர்கள் போலவே ‘ஆன்டி ஸ்பை வேர்’களும் கிடைக்கின்றன.இதனை பயன்படுத்தி, நம் மொபைலில் ஸ்பை ஆப்  அதனை செயல் இழக்க செய்ய முடியும் என்கின்றனர்.