do not drink whiskey without water
குடி குடியை கெடுக்கும்னு நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க. குடியை கெடுத்தாலும் நோ பிராப்ளம் என குடிப்பவர்கள் தொடர்ந்து குடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அரசும் விற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
அதெல்லாம் ஓகே. அதானால இப்ப என்னனு யோசனையா? அதாவது விஸ்கியுடன் தண்ணீரை கலந்து அடித்தால் அதனுடைய சுவை மென்மேலும் கூடுதாம்.
அதற்கு முக்கியக் காரணம் விஸ்கியில் உள்ள பினால் என்ற மூலக்கூறு தண்ணீருடன் சேரும்போது அது வித்தியாசமான சுவை அளிக்கிறதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது, தண்ணீரின் மூலக்கூறான H-20 பினாலுடன் சேரும்போது அதிக சுவை ஏற்படுகிறதாம்.அதனால் தான் விஸ்கியை ராவாக அடிக்கக் கூடாது என கூறப்படுகிறது.
விஸ்கியில் உள்ள ஆல்கஹால் அளவு என்ன தெரியுமா?
பார்லியை பல நாட்கள் புளிக்க வைத்து, அதிலிருந்துதான் தயாரிக்கப்படும் விஸ்கியில் 90 சதவீதம் ஆல்கஹாலின் அளவு இருக்கும்.இதனை தண்ணீருடன் கலக்கும் போது, 40 சதவீதமாக்க தண்ணீர் கலக்கப்படுகிறது. இதனால்தான் விஸ்கியின் சுவை கூடுகிறது.எனவே இனி விஸ்கி விரும்பிகள் கொஞ்சம் ராவா அடிக்காமல் தண்ணீர் கலந்து அடிப்பீர்களாக....
