இயக்குனர் மோகனின் "அடுத்த திரௌபதி" ரெடி..! ட்வீட் போட்டு "ட்விஸ்ட்" வைத்த இசையமைப்பாளர்..!

திரௌபதி படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்து அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என திரௌபதி பட  இசையமைப்பாளர் ஜூபின் தெரிவித்து உள்ளார் 

இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப்படமாக பார்க்கப்பட்ட  திரௌபதி படத்தில் நாயகனாக நடித்து இருந்தார் ரிச்சர்டு 

இந்த படத்தில் நாடக காதலை மையமாக வைத்து பல்வேறு கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தது. மேலும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது .இந்த ஒரு நிலையில் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய அடுத்த படமும் கடவுள் பெயராக தான் இருக்கும் என தெரிவித்து இருந்தார் இயக்குனர் மோகன்.

நிலைமை இப்படி இருக்கும்போது தளபதி படத்தின் இசையமைப்பாளர் ஜூபின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் மற்றும் இயக்குனருடன் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றி எங்கள் கூட்டணியில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே, திரௌபதி படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படமும் சாமி பெயரில் இருக்கும் என்பதால் இப்போதே அடுத்த படம் எந்த கதையை  அடிப்படையாக கொண்டு இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு  கிளம்பி உள்ளது.