சுகர் இருக்கா? அப்ப இனி கூல் ட்ரிங்க்ஸ் குடிக்காதீங்க.. இல்லன்னா அவ்வளவுதான்!!
Diabetic Patients Health Care : நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், கூல்ட்ரிங்ஸ் ஒருபோதும் குடிக்க வேண்டாம். மீறினால், என்ன நடக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் வந்தால் அது குறைப்பது மிகவும் கடினம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதை சில மருந்துகள் மற்றும் இயற்கை வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் இருந்தாலும் அதை முழுமையாக நீக்குவது சாத்தியமில்லை. உங்களுக்கு தெரியுமா நாம் சாப்பிடும் இனிப்புகள் மற்றும் குடிக்கும் பானங்களில் அதிகளவு சர்க்கரை இருந்தால், அது நம் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும்.
இன்றைய காலத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தான் அதிகம் குடிக்க விரும்புகிறார்கள். ஆனால், இதை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டத்தில் நிறைய சர்க்கரை வெளியேறுகிறது மற்றும் நீரிழிவு நோய் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு நிச்சயம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சமயத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதும் முடியாத காரியம். அதுமட்டுமின்றி, இது நம் உடலில் முக்கிய உறுப்புகளான கண் சிறுநீரகங்கள் மற்றும் இதயத்தை மோசமாக பாதிக்கும்.
இதையும் படிங்க: காலையில 'இத' மட்டும் செஞ்சா போதும்.. சர்க்கரையின் அளவு உயராது!
நம் உடலின் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சர்க்கரை சேரும்போது, குளுக்கோஸ் அளவானது அதிகரித்துக் கொண்டே செல்லும். இறுதியில் அது தீவிரம் அடைந்து இதய ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் தெரியுமா? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உடலில் மற்ற அது பிற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் குளிர் பானங்கள் அளவோடு அருந்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்க இவற்றை தவிர்ப்பது கூட நல்லது தான். நிபுணர்களின் கூற்றுப்படி சர்க்கரை உள்ளவர்கள் கூல் ட்ரிங்ஸ் குடிப்பது முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் அதற்கு பதிலாக நீங்கள் இயற்கை முறையில் பழசாறு, சுகர் இல்லாத டீ போன்றவற்றை குடிக்கலாம்.
இதையும் படிங்க: நீங்க சரியா தூங்கமாட்டீங்களா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. முழு விவரம் இதோ!!
நீரிழிவு நோய் அறிகுறிகள்:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான அறிகுறிகள் உணர்ந்து தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் போது அடிக்கடி தாகம் எடுக்கும் மற்றும் சிறுநீர் கழிப்பது. இது தவிர பிற அறிகுறிகள்:
- உடல் எடை குறையும்
- சோர்வு அதிகரிக்கும்
- கண்மங்கலாக தெரியும்
- காயங்கள் விரைவில் ஆறாது.
இவற்றின் நினைவில் வைத்துக்கொள்: அதிக சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு குளிர்பானங்கள் குடிப்பது நல்லதல்ல. சொல்லப்போனால் செயற்கை இனிப்புகள் கொண்ட இந்த பானமும் அதிகமாக உட்கொள்ளக் கூடாது மீறினால் உடல் பருமன், இதய பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.