நீங்க சரியா தூங்கமாட்டீங்களா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. முழு விவரம் இதோ!!

Type 2 Diabetes : நோய்க்கும் தூக்கத்திற்கு இடையே ஆழமான தொடர்பு உள்ளதும் அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

health lack of sleeping can increase risk of type 2 diabetes in tamil mks

தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனால் பல வகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றது. டைப் 2 நீரிழிவு என்பது தூக்கமின்மையால்  ஏற்படும் உடல்நல பிரச்சினைகளில் ஒன்றாகும். நாம் சரியாக தூங்கவில்லையென்று உடலில் இன்சுலின் எதிர்ப்பு தன்மை ஏற்பட தொடங்குகிறது. டைப் 1 நீரிழிவு நோயில் உங்கள் உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது. எனவே நீங்கள் தொடர்ந்து இன்சுலின் எடுக்க வேண்டும். அதே நேரத்தில் டைப் 2 நீரிழிவு நோயில் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்கிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை. எனவே,  தூக்கமின்மையை டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தூக்கமின்மை டைப் 2 நீரிழிவு நோயுடன் எவ்வாறு தொடர்புடையது?

ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமன் மற்றும் உட்கர்ந்த வாழ்க்கை முறை மட்டுமே டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழி வகுக்காது; தூக்கமின்மையும் இதற்கு பங்களிக்கிறது. உண்மையில், ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியை போலவே நல்ல தூக்கம் அவசியம். தூக்கமின்மை இன்சுலின் எதிர்ப்பு போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க செய்கிறது. சர்க்கரை நிறைந்த உணவுகளின் மீதான ஆசைகள் காலப்போக்கில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். கூடுதலாக போதுமான தூக்கம் இல்லாதது உடல் எடையை குறைக்கிறது.

இதையும் படிங்க:  எச்சரிக்கையாக இருங்கள்! சரியாக தூங்கவில்லை என்றால் திருமண வாழ்க்கை நாசமாகிவிடும்..! எப்படி?

எச்சரிக்கை அறிகுறிகள்:

ஒவ்வொருவரும் குறைந்தது 7-9 மணி நேரம் தூங்க வேண்டும். மேலும் பகலில் தூக்கம் வருவது, சோர்வாக இருப்பது மோசமான தூக்கத்தின் அறிகுறிகள் ஆகும். பிற அறிகுறிகள் பின்வருமாறு:

  • மெதுவாக சிந்திப்பது
  • குறுகிய கவனம் 
  • நினைவாற்றல் இழப்பு 
  • ஆற்றல் இல்லாமல் 
  • மன அழுத்தம் பதட்டம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகள் உட்பட மனநிலை மாற்றங்கள்.

இதையும் படிங்க:  இந்த 1 பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிங்க.. சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க!!

தடுக்க வழிமுறைகள்:

  • வார இறுதி நாட்களில் கூட நல்ல உறக்கம் அவசியம் மற்றும் வழக்கமான படுக்கை நேரத்தை பின்பற்றுங்கள்.
  • தூங்கும் போது படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், வசதியாகவும், குளிர்ச்சியாவும் வைத்திருங்கள்.
  • பகலில் சில உடல் செயல்பாடுகளை செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் சோர்வடையாமல் தடுக்கப்படும்.
  • தூங்கும் முன் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.
  • நீங்கள் ரொம்ப சோர்வாக இருக்கும் சமயத்தில் மட்டுமே தூங்கச் சொல்லுங்கள்.
  • தினமும் இரவு 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள்.
  • நல்ல தூக்கம் பெற தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:
  • மாலையில் காஃபின், ஆல்கஹால் அல்லது நிக்கோட்டின் உட்கொள்வதை தவிர்க்கவும்.
  • பிற்பகல் 3 மணிக்கு பிறகு தூங்குவதை தவிர்க்கவும். நீண்ட நேரம் தூங்குவதையும் தவிர்க்கவும்.

இரவு தூங்க செல்வதற்கான சரியான நேரம்:

நீரிழிவு நோயை தடுக்க தூங்கும் நேரமும் மிகவும் அவசியம் இரவு தூங்குவதற்கு உகந்த நேரம் 9-10 மணி. இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு அதாவது, நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் தூங்குபவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் மரணம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios