Asianet News TamilAsianet News Tamil

Treadmill-ல் ஓடிய போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.. ஜிம்மில் நடந்த சோகம்..

டெல்லியில் ஜிம்மில் இருந்த டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Delhi Youth dies due to electric shock while running on treadmill.. Tragedy in gym..
Author
First Published Jul 20, 2023, 12:33 PM IST

வடக்கு டெல்லியின் ரோகினி பகுதியில் சக்ஷம் ப்ருதி என்ற நபர் வசித்து வருகிறார். 24 வயதான அவர் பிடெக் முடித்துவிட்டு குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் தினமும் செக்டர் 15ல் உள்ள ஜிம்ப்ளக்ஸ் என்ற ஜிம்மிற்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை அவர் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 7.30 மணியளவில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை, பிஎஸ்ஏ மருத்துவமனையில் இருந்து ஒரு இளைஞரின் மரணம் தொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.  ரோகினியின் செக்டார் 15 இல் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்ற நிலையில் கொண்டு வரப்பட்டதாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை தொடங்கிய நிலையில், முதற்கட்ட விசாரணையில் டிரெட்மில்லில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் மின்சாரம் தாக்கியதே மரணம் என உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜிம் மேலாளர் அனுபவ் துக்கலை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

எச்சரிக்கை.. இந்த அன்றாட உணவுகள், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்துமாம்..

Follow Us:
Download App:
  • android
  • ios