நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள நிலையில் ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலக முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 88 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.  இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,36,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26, 681 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல், இந்தியாவில்  இதுவரை 1024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், யாரும் வெளியில் செல்லக்கூடாது என்பதால் பொதுமக்கள் வீட்டிலியே முடங்கி உள்ளனர். 

இந்நிலையில், வீட்டுக்குள்ளேயே  அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள நிலையில் ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆணுறை விற்பனை சில கடைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறை தவிர பிற கருத்தடை சாதனங்கள் விற்பனை அமோகமாக உயர்ந்துள்ளது. இது போல் செக்ஸ் கருவிகள் விற்பனையும் உயர்ந்துள்ளது. இவற்றை ஆன்லைனில் பலர் ஆடர் செய்கின்றனர். மேலும் பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு உள்ளன. ஆனாலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சிலர் ஆபாச இணையதளங்கள் பிரீமியம் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.