பாதிக்கட்டவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு "தொற்றுமா கொரோனா'..? 

கொரோனா அறிகுறி இருந்தால் மட்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்பதில்லை. பாதித்தவர்கள் குணமடைந்த பிறகும் 14 நாட்கள் தனித்து இருப்பது நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் 

அதாவது நோய் பாதித்து குணமடைந்தவர்களை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது .அதன் படி சீனா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளராகள் பெய்ஜிங்கில் உள்ள சீன ராணுவ மருத்துவமனையில்,ஜனவரி 28 முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை சிகிச்சை பெற்ற சராசரியாக 35 வயதுள்ள 19 பேரை ஆய்வு செய்தனர்.

இவர்கள் அனைவருக்குமே வைரஸ் தொற்றிய பின்  5 நாட்களில் அறிகுறி தெரிய தொடங்கி உள்ளது. பின்னர் இதே அறிகுறி தொடர்ந்து 8 நாட்கள் நீடித்து உள்ளது. இதற்கான சிகிச்சை எடுத்த பின்னர் மேற்கொண்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என  இரண்டு முறை உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம் என அனுமதித்து பின்னரும்சோதனை செய்யட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குணமடைந்த ஒரு வார காலத்தில் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தோற்று ஏற்பட்டு உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

எனவே கொரோனா அறிகுறி தென்பட்டாலும், அதில் இருந்து குணமடைந்த பின்னரும், குறைந்தது இரண்டு வாரத்திற்கு தனிமை படுத்திக்கொள்வது நல்லது. கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள தற்போது உள்ள நிலவரப்படி தனிமைப்படுத்திக்கொள்வதே மிகவும் சிறந்தது.