Asianet News TamilAsianet News Tamil

பத்ம விருது நிகழ்ச்சியை நிறுத்திய கொரோனா வைரஸ்.!! எப்போது தொடங்கும் இந்த விழா.?

இந்தியாவில், ஒவ்வொரு துறையிலும் சாதித்த சாதனையாளர்களுக்கு வழங்கும் விருதுகள் தான் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை கொரோனா நிறுத்தி இருக்கிறது. 
 

Corona virus stops Padma award ceremony When does this festival begin?
Author
India, First Published Mar 14, 2020, 10:43 PM IST

T.Balamurukan
இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த சாதனையாளர்களுக்கு வழங்கும் விருதுகள் தான் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை கொரோனா நிறுத்தி இருக்கிறது. 

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கும் விழா டெல்லி ராஷ்டிரபதி பவனில் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி ஏற்கனவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Corona virus stops Padma award ceremony When does this festival begin?

 இந்தியாவில் கொரோனா வைரஸ் தந்து உத்ரதாண்டவத்திற்காக உள்ளே நுழைந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுத் தரப்பிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை தேசிய "பேரிடராக" மத்திய அரசு அறிவித்துள்ளது.

Corona virus stops Padma award ceremony When does this festival begin?

இந்தநிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஏப்ரல் 3ந்தேதி நடைபெற திட்டமிட்டிருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த விழா நடைபெறும் நாள் மற்றும் நேரம் பற்றி பின்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios