ஊரே அமைதியா இருக்கும் போது..பிஸினஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் "ரிச்சி ஸ்ட்ரீட்"! நடவடிக்கை எடுக்குமா அரசு? 

கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் தருணத்தில் மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்த ஒரு நிலையில் வணிக வளாகங்கள் முதல் சினிமா திரையரங்குகள் பள்ளி-கல்லூரி தனியார் நிறுவனங்கள், அவ்வளவு ஏன்? அரசு ஊழியர்கள் கூட வீட்டிலிருந்து வேலை செய்ய கூடிய சூழல் இருந்தால் செய்யும் அளவுக்கு அனைத்து விதங்களிலும் மக்களைத் தனிமைப்படுத்துவதிலேயே மிகவும் கவனம் செலுத்தி வரும் இந்த ஒரு தருணத்தில், வியாபாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சென்னை ரிச்சி ஸ்ட்ரீட், நரசிங்கபுரம் தெரு, வால்ரஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் மக்களின் கூட்டம் அதிக அளவு இருக்கிறது.

கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரிச்சி ஸ்ட்ரீட் சென்றால் கிடைக்காத பொருளே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனவே சென்னை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு இருப்பதால்,ரிச்சி ஸ்ட்ரீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர் மக்கள்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக தான் அரசு இவ்வளவு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வளவு ஏன்? மதுபான பார்கள் கூட மூடப்பட்டிருக்கும் இப்படி ஒரு தருணத்தில் ரிச்சி ஸ்ட்ரீட், நரசிங்கபுரம் ஸ்ட்ரீட். வாலரஸ் ஸ்ட்ரீட் மட்டும் இயங்குவது சரியா? இங்கிருந்து மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதா ?என பல்வேறு கேள்விகள் எழுகிறது.

சென்னை தி நகர் உள்ள  அனைத்து கடைகள், Fountain plaza  உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும்  தருணத்தில், மக்களின் கூட்டம் ரிச்சி ஸ்ட்ரீட்டில் மிக அதிகமாக பார்க்க முடிகிறது. எனவே இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்